மங்கிய நீலப்புள்ளி

கவிதை நூல் அறிமுக விழா

- Advertisement -

மங்கிய நீலப்புள்ளி

?கவிதை நூல் அறிமுக விழா

கவிஞர் சந்துருவை அனைவருக்கும் ஓவியராகத்தான் அறிமுகம். மலேசிய நவீனத் தமிழிலக்கியத்தின் குறிப்பாக இலக்கிய சிற்றிதழ்களில் இருக்கும் கோட்டோவியங்கள் பல சந்துருவினால் உருவானவை. ஓவியனாக அறியப்பட்ட சந்துருவின் முதல் கவிதை நூல் வருகின்ற 05.09.2021ஆம் நாளில் இரவு 8.00 மணிக்குப் பாரதி கற்பனைத் தளத்தின் நேரலையில் வெளியீடு காணவுள்ளது.

நாடறிந்த கவிஞர் பூங்குழலி வீரன் அவர்கள் சந்துருவின் கவிதைகள் குறித்து உரையாற்றவுள்ளார்.

மறவாமல் கலந்து கொண்டு சந்துரு காட்டும் வார்த்தைகளால் ஆன சித்திரைங்களைத் தரிசிப்போம். எது கவிதை எனத் தேடும் ஒவ்வொருவருக்கும் அது தனது இருப்பை விரிக்கவல்லது. சந்துருவின் கவிதைகளில் ஊடாடும் மௌனமும் அழகியலும் இரு வேறு கோடுகளாகப் புறப்பட்டு ஓர் ஓவியத்தின் நிறைவு புள்ளியாக இணைகின்றன.
அந்த மங்கிய நீலப்புள்ளிக்குள் கரையலாம்.

➡️நேரலை இணைப்பு:
http://tiny.cc/sandrukavithaigal

வரவேற்பது
கூகை பதிப்பகம்
பாரதி கற்பனைத் தளம்

விழா சிறக்க மின்கிறுக்கல் மின்னிதழின் வாழ்த்துகள்….

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -