பந்து

கவிதை

- Advertisement -

கடற்கரையில்,
முட்டு சந்தில்,
புல் வெளியில்,
சகதியில்,
குப்பைத் தொட்டியில்

என் பேரன்பின்
சிறு பந்தை
வெளியே
வீசியபடியே
இருக்கிறீர்கள்…

வால் சுழற்றி
வாயில் கவ்வியபடி
மீண்டும் மீண்டும்
உங்களிடம்
வந்து கொண்டேயிருக்கிறேன்,
விட்டு விலகும்
கணம் மட்டுமே
எனக்கானதென
நான் ஒருபோதும்
அறியப் போவதில்லை.

காமராஜ்
காமராஜ்https://minkirukkal.com/author/kamaraj/
என்னை பாதித்த, பாதிக்கும் விடயங்களை எழுத்தாக்க முயலும் ஒரு சாதாரணன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -