நாய் போலும் வாழ்க்கை

கவிதை

- Advertisement -

எதிர்வீட்டுக்காரர்
காலால் எத்த
பக்கத்து வீட்டுப்பையன்
கல்லால் அடிக்க
மருத்துவர் வீட்டுக் காவலாளி
குச்சியால் விரட்ட
புதிதாக வந்த நாய்
வெறியுடன் துரத்த
கையாலாகாமல்
ஊளையிட்டு
வாலைச்சுருட்டி
வண்டியடியில்
படுத்துறங்கும்
நடைப்பிணமாய்
வீடில்லா நாய்க்குட்டி

கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -