நான்காம் பரிமாணம் – 87

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் மாய அதிகாரத்தில் உங்களால் புரிந்து கொள்ள இயலாத பல்வேறு செயல்களை பற்றி கூறிக் கொண்டு வருகிறேன். மாயம் என்றால் என்ன என்று சென்ற பகுதியில் உங்களுக்கு கூறினேன். உயிரினங்களுக்கு இருக்கும் மாயன்களைப் பற்றி இந்த பகுதியில் கூற ஆரம்பிக்கப் போகிறேன். அதன் முதல் கட்டமாக செடி கொடிகளில் கூட இருக்கும் சில விதிகளைப் பற்றி இந்த பதவியில் ஆரம்பிக்கலாம்.


பெயர் இல்லாத செடி


எந்த ஒரு தாவர வகையையும் புரிந்துகொள்வதற்கு நீங்கள் முதலில் நீங்கள் அதனை வகைப்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளீர்கள். அதாவது அந்தத் தாவரத்தின் பண்புகளை வைத்துக்கொண்டு அதனை ஒருவகையாக உருவாக்கி எந்த ஒரு தாவரத்தையும் நீங்கள் உருவாக்கிய உருவாக்கிக் கொள் கொண்டு வந்து விடுவீர்கள். இவ்வாறு பண்புகளை வைத்து நீங்கள் சுமார் 4 லட்சம் தாவரங்களை இதுவரை உலகத்தில் வகைப்படுத்தி வைத்துள்ளீர்கள். அப்படியானால் உலகத்தில் மொத்தம் நான்கு இலட்சம் வகையான தாவரங்கள் தான் உள்ளனவா என்றால் கிடையாது. நீங்கள் கண்டுபிடித்து வகைப்படுத்திய தாவரங்கள் தோராயமாக வெறும் 10 சதவிகிதம் மட்டும்தான். மீதமுள்ள 90 சதவீதம் தாவரங்கள் அனைத்தும் இதுவரை உங்களால் கண்டுபிடிக்கப்படவில்லை! கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட உங்களால் ஏன் மற்ற தாவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதில் பலவிதமான தாவரங்கள் உங்களுடைய கண்களுக்கு தென்படாமலும் மற்ற தாவரங்கள் உங்கள் அறிவுக்கு புலப்படாமல் கூட இருந்து வந்துள்ளது. நான் சென்ற பகுதியில் கூறியது போல உங்கள் அறிவுக்கு புலப்படாத எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு மாயம் போன்ற தான் தோன்றும். ஆனால் தொடர்ந்து முயற்சி செய்து அதனை கண்காணித்து வந்தால் அதன் பின்னால் உள்ள ரகசியங்களை உங்களால் அம்பலப்படுத்த முடியும்.


உதாரணமாக தென்னமெரிக்க நாடான பெருவில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு செடி அமேசான் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் செடியை யாரும் அதுவரை பிரித்தறியவில்லை. உடனடியாக அதனை பகுப்பாய்வு செய்ய ஆரம்பித்தனர். இறுதியில் விஞ்ஞானிகளுக்கு தலைசுற்ற ஆரம்பித்தது. அந்தச் செடியை வகை படுத்துவதற்கு அதற்கு குறிப்பிட்ட சில குணம் இருந்தால் தொடங்கிய வேலை எளிதாக முடிந்து இருக்கும். ஆனால் அந்தச் அந்தச் செடிக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குணாதிசியங்கள் இருந்தது. அதனை எந்த வகையில் சேர்த்தாலும் அந்த வகையில் இருக்கும் மற்ற செடிகளுடன் ஏகப்பட்ட வேற்றுமைகளும் கூட இருக்கும். இந்த ஒரே ஒரு செட்டியார் இதுவரை உருவாக்கப்பட்ட 4 லட்சம் செடிகளின் வகைப்படுத்தல் உம் கேள்விக்குறியாக மாறும் நிலை வந்தது! அதனால் கடந்த 50 வருடங்களாக இந்த செடிக்கு பெயரை வைக்கப்படவில்லை. இந்து பல காலங்கள் கழித்து டிஎன்ஏ ஆராய்ச்சியில் உங்கள் விஞ்ஞானம் வளர்ந்து தற்போதைய நிலைக்கு வந்த பின்பு அந்தச் செடியின் டிஎன்ஏவை வைத்து ஆராய்ந்து பார்த்ததில் அது ஒரு வகைக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால் Aenigmanu Alvareziae என்று வைத்துவிட்டார்கள். Alvareziae என்பது அந்த செடியின் வகையாகும், Aenigmanu என்றால் “மானுவின் மர்மம்” என்று அர்த்தம். மானு எனப்படும் காட்டுக்குள் இந்தச் செடி கண்டெடுக்கப்பட்டதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது பட்டது. ஒரே ஒரு செடிகொடி இவ்வளவு மர்மம் ஒளிந்து இருந்தால் நீங்கள் இதுவரை கண்டுபிடிக்காத 90 சதவிகித செடி கொடிகளில் எவ்வளவு மர்மங்கள் ஒளிந்து இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?


நீங்கள் கண்டுபிடிக்காத செடிகள் மட்டும்தான் பல்வேறு மாயங்கள் இருக்கின்றன என்று நினைத்து விட வேண்டாம். நீங்கள் அன்றாடம் காணும் செடிகளுக்கும் கூட பல மர்மங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதும் விரவியுள்ள டான்டேலியன்(Dandelion) செடியை நீங்கள் அன்றாடம் பார்த்திருப்பீர்கள். வளர்ந்த செடியில் ஒரு பந்து போல விதைகள் வளர்ந்திருக்கும். அந்த பந்தை எடுத்து சற்று ஊதினால் கூட அதிலுள்ள ஒவ்வொரு விதையும் காற்றில் பறக்க ஆரம்பித்துவிடும். இதனை நீங்கள் சீமை செடி என்றுகூட கூறுவீர்கள். குழந்தைகள் இந்த செடியை பிடித்து ஊதி விளையாடுவார்கள். இந்த செடிக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்னவென்றால் அந்த விஜய் பந்தை நீங்கள் சற்று ஊதினாள் கூட சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை இதனால் பறந்து செல்ல முடியும். அந்த விதையின் எடையை தூக்கிக் கொண்டு எவ்வாறு இதனால் தொலைவான தூரம் வரை பறக்க முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் பன்னெடுங்காலமாக ஆராய்ச்சி செய்து வந்தனர். எப்படி ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் அவனுடைய செயல்முறை மட்டும் அவர்களுக்கு புரியவே இல்லை. ஒருவேளை காற்றில் பறவைபோல் சில இறக்கைகளில் துணைகொண்டு பறக்கிறது என்று பார்த்தால். அதற்கு நீளமான சிறுவர்கள் எதுவும் கிடையாது. ஒரு சில மென்மையான ரோமங்கள் மட்டுமே உண்டு. அதன் துணைகொண்டு இறக்கை போல பறப்பது என்பது இயலாத காரியம். மிகவும் மென்மையான அந்த ரோமங்களால் நீங்கள் உருவாக்கிய ஹெலிகாப்டர் போல பறப்பது கூட இயலாத காரியம் தான். இறுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த முடிவு முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. அது சொல்லும் போது மிகவும் சிறிய ஒரு சூறாவளியின் மையப்பகுதி போல காற்றழுத்த தாழ்வு நிலையை உருவாகிறது. அந்தத் தாழ்வு நிலையால் தொடர்ந்து உயர அதனால் பறக்க முடிகிறது! விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடித்து இருந்தால்கூட இது உண்மையா என்பதை கண்டறிவதற்கு இன்னும் பல காலங்கள் ஆகலாம். அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் இதே உத்தியைப் பயன்படுத்தி மிகவும் எளிமையாக குறைந்த மின்சாரத்துடன் அதிக தூரம் பறப்பதற்கான தொழில்நுட்பம் கூட உருவாக்கப்படலாம். அதனை உருவாக்கும் வரையில் இது ஒரு மாய மாகத்தான் இருக்கும்.


செடிகளுக்கும் இருக்கும் மர்மங்களை கூறிக்கொண்டு போனால் அதற்கு முடிவே கிடையாது. ஆனால் இவை அனைத்தையும் மிஞ்சக் கூடிய பல்வேறு மர்மங்கள் விலங்குகளுக்கு ஒளிந்துள்ளன. அவை என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -