தாயுமானவள்

கவிதை

- Advertisement -

‘நம்ம கடையிலேயே
நல்லதா எடுத்துக் கிட்டன்’

‘பையனுக்குப்
பசிக்குமென
அவித்தகடலை’

‘பாப்பா உடம்புக்கு
உளுந்தங்களி நல்லது’

படைத்த இலையொன்று
பசுவுக்கும் போனது

‘கோவிலுக்குப் போகலையா?’

‘நம்ம வீடே
கோயில் தானே’

இப்படித்தான் கழிந்தது
இணையரின்
இன்னுமொரு
பிறந்தநாள்

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
கண்ணன்
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -