சிறுகோட்டுப் பெரும்பழம்
தென்றலோடு கலந்த குறுஞ்செய்தி
மனைவிக்கு கொண்டு வந்த சேதி…….
உயரே பறக்கும் பட்டம்தனை
தன் கட்டுக்குள் அடக்கும்
மெல்லிய நூலாய்!
வெற்றியின் இலக்கில் தனித்து நிற்கும்
வில்லிலிருந்து எய்யப்பட்ட
சின்னஞ்சிறு அம்பாய்!
சகியே!என் நிலைமையை நீ அறிவாயா?
வழியனுப்பும்போது நீ கொடுத்த
அந்த முத்தத்தின் ஈரம் காயாமல்
இந்தப் பெரும்பழம்தனை
வெளிநாட்டுக் கட்டிடப்பணி வெயிலில் காயாமல்
உன்னோடு வந்து உடனே கனியும்படி
நீ கவ்வி இழுக்கிறாய்!
??????????????????????????
காதல் மயிலிறகே
அவளால் அரும்பிய முதல் முகப்பரு
வைரக் கல்லாய் மின்னியபோது
காதல் மயிலிறகைப் புதைத்த அகம்
அட்சயபாத்திரமாகி வழிந்தது!
அவற்றை வெட்க நிழலில் மறைத்து
கள்ளியில் மட்டுமே பேரொளியாக்கியவனின்
வாழ்க்கை வேகமாய் உருண்டோட
கோர விபத்துகளில் சிக்கியவர்களின்
படுகாயங்களை ஆற்றித் தேற்றும்
துடிப்புமானியுடைய ஆண் தேவதையாயினும்
அன்றைய பருவின் வடு மட்டும் காயாது
இவன் நெஞ்சை வருத்துவதும் ஏனோ..
இனியொரு முறை பிறப்புக் கிடைக்காதா?
அக்காதல் மயிலிறகை என்னவள் மீட்டுவந்து
தீராக்காதல் திரவக் குடுவையில் நனைத்து
துளியூண்டு துளியூண்டாய் மனரணத்தில் தடவ!