இ(எ)துவும் கடந்து போம்

இரண்டு கவிதைகள்

இ(எ)துவும் கடந்து போம்

- Advertisement -

பசை அட்டையில் சிக்கிய
எலிக் குஞ்சின்
கடைசி பார்வை,
“எப்பப்பா ஊருக்கு வருவே?”
என்ற அம்மாவின்
கடைசி போன் கால்,
“come on man, I can’t breath”
முழங்காலில் கழுத்து
நெரிபட்டவனின் ஓலம்,
விசை இழுப்பதற்கு முன்னான
ஒரு மனித வெடிகுண்டின்
ஆழ் சுவாசம்,
நெஞ்சில் குண்டு
பாய்வதற்கு முன்
கொடுக்கப்பட்ட பிஸ்கட்டின்
துணுக்குச்சுவை,

இதோ நாளைக்கு புத்தாண்டு,
இ(எ)துவும் கடந்து போம்!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

தேவ விளக்கம்

ஒரு பூ உதிர்தலுக்கு பதறுகிறாய்,
அறையில் மாட்டிய சிறு எலி குஞ்சையும் உன்னால் நசுக்க இயலவில்லை,
சிரியாவில் இறந்த சிறுவன் உன்னை தூங்கவிடவில்லை,
எப்போதோ இறந்த அம்மாவின் கடைசி அழைப்பு இன்னும் உன் காதுகளில் எதிரொலிக்கிறது,
ஒரே காதலியை இன்னும் நினைந்து உருகுகிறாய்,

நீ சுமந்த நினைவுகளின் பாரம் என்னையும் சேர்த்து இழுக்கிறது,

எனவேதான் என்றார் தேவன், கடைசி கை விடுதலுக்கு முன்.

காமராஜ்
காமராஜ்https://minkirukkal.com/author/kamaraj/
என்னை பாதித்த, பாதிக்கும் விடயங்களை எழுத்தாக்க முயலும் ஒரு சாதாரணன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -