வானத்து விண்மீன்கள் பார்த்துக்கொண்டிருந்த இரவில்
துளிர்த்த கண்ணீரோடு
யமுனா கடல் பார்த்து நின்றுகொண்டிருந்தாள்
தூரத்துக் கடலோடிகள் விசையை ஆழ்கடலுக்குள் செலுத்திக்கொண்டிருக்க
அவள் தலைகோத யாருமில்லை
பாதம் கழுவிச்செல்லும் அலை
ஒரு அலைக்கு பாசியை கால்களில் கோர்த்து
ஒரு அலைக்கு சிறிய சங்கொன்றை சமர்பித்து
ஒரு அலைக்கு மரக்குச்சியை கொணர்ந்து
ஒரு அலைக்கு மணலை பொதித்து
ஒவ்வொரு முறையும் சிறிதும் பெரிதுமாக இறைஞ்சுகிறது
கடல் கொள்ளும் அவள் மௌனம் கண்டு
இருள் கிழித்து
சிறகு விரித்த பறவையொன்று மேலெழும்பிப் பறக்கிறது
ஒன்றும் அறியாத கடல் ஆர்பரித்துக்கொண்டிருக்க
விடுதலை வேண்டிய யமுனா கண்களுக்குள் கடலை இழுத்துக்கொண்டிருக்கிறாள்
யமுனா வீடு – 26
தொடர் கவிதை