கார்கால சிறுகதைப்போட்டி முடிவுகள் 2021

- Advertisement -

மின்கிறுக்கல் வாசகர்களுக்கு வணக்கம். கார்கால சிறுகதைப் போட்டிக்கு பேராதரவு தந்து எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள்! நாங்கள் உறுதியளித்தபடி ரூபாய் 5000 மதிப்புள்ள மொத்த பரிசினை வென்றவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பரிசு பெறும் ஒன்பது கதைகளும் மின் கிறுக்கல் இணையதளத்தில் எழுத்தாளர்களின் புகைப்படம் மற்றும் சுய குறிப்புடன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிடப்படும். முதல் பரிசு பெறும் சிறுகதை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பங்கு பெற்ற அனைவரின் கதைகளையும் பிரசுரம் செய்ய முடியாவிட்டாலும் தங்களின் பங்களிப்பையும் பேரன்பையும் பாராட்டும் விதமாக ஒரு சிறிய அன்பளிப்பும் தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான மின்கிறுக்கலை  உருவாக்கிட உதவும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களது நன்றியை உரித்தாக்குகிறோம்.

பரிசுகளின் விவரம்:

முதல் பரிசு (2000 ரூபாய்கள்):  

  • சோ சுப்புராஜ், சென்னை

இரண்டாம் பரிசு (1000 ரூபாய்கள்): 

  • வாதூலன்,  சென்னை

மூன்றாம் பரிசுகள் (தலா 500 ரூபாய்கள்): 

  • க. ராஜசேகரன், மயிலாடுதுறை
  • எஸ் ஸ்ரீதுரை, காஞ்சிபுரம்

ஆறுதல் பரிசுகள் (தலா 200 ரூபாய்கள்): 

  • அம்மு ராகவ் 
  • மணிமாலா மதியழகன்
  • ந. ஜெகதீசன், சென்னை
  • எஸ். ராமன், சென்னை
  • மீனாட்சி முத்தையா

பரிசு பெற்ற அனைவரும் தங்கள் மின்னஞ்சலை பார்த்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்.

தங்கள் படைப்புகளை editor@minkirukkal.com எனும் முகவரிக்கு அனுப்பி தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் அன்புடன்,

ஆசிரியர்,

மின்கிறுக்கல்

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -