க வீரமணி

க வீரமணி
1 POSTS0 COMMENTS
https://minkirukkal.com/author/veeramanig/
முனைவர் க வீரமணி புதுவை யூனியன் பிரதேசம் , காரைக்கால் பிராந்தியம் ஊழியப்பத்து என்கிற கிராமத்தைச் சார்ந்தவர் தற்சமயம் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மத்திய பாதுகாப்பு படையில் (CRPF ) 25 ஆண்டு காலம், இந்தியா முழுவதிலும் பணிபுரிந்திருக்கிறார், பின்பு விருப்ப ஓய்வு பெற்று சென்னை ஆவடியில் உள்ள வேல்டெக் கலைக் கல்லூரியில் வணிக நிர்வாக துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பொருளியலில் ஒரு முதுகலை பட்டமும் (MA-ECONOMICS) வணிக நிர்வாகத்தில் மனிதவள மேலாண்மையில் (MBA-HRM ) ஒரு முதுகலைப் பட்டமும், வணிக நிர்வாகவியல் நிதி மேலாண்மையில் (MBA - FINANCE ) ஒரு முதுகலைப் பட்டமும் மனித உரிமையில் (MA - HUMANRIGHTS ) ஒரு முதுகலைப் பட்டமும் ஆக நான்கு முதுகலை பட்டங்களை படித்துள்ளார், மேலும் தொழிலாளர் சட்டத்தில் ஒரு பட்டயப்படிப்பும் படித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சென்னை பெருநகர பேருந்து தொழிலாளர்களின் வாழ்வியலை ஆராய்ந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். தமிழ்நாடு புதுவைக் கான மாநில அளவிலான தகுதித் தேர்விலும் (SLET) மேலும் யுஜிசி நடத்தும் தேசிய அளவிலான விரிவுரையாளர் தகுதித் தேர்விலும் (NET) தேர்ச்சி பெற்று சென்னை பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். பொருளாதாரம் வணிக மேலாண்மைத் துறையில் இவர் பட்டங்கள் பெற்று பணிபுரிந்தாலும் தமிழின் மீது தீராக் காதல் கொண்டுள்ளார். நிறய கவிதைகள், சிறு கதைகளை எழுதி வருகிறார். இவர் தன்னுடைய முதல் கவிதை தொகுப்பான " செல்பிபுள்ள" என்ற நூலை அமேசான் கிண்டில் ஆன்லைனில் வெளியிட்டுள்ளார் அது பல வெளிநாடு வாழ் தமிழ் வாசகர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பாராட்டை பெற்றது, அந்தப் புத்தகத்தை ஒட்டி சென்னையில் அகநாழிகை பதிப்பகம் இவரது கவிதைகளை தொகுத்து "உடல்முழுவதும் மேகங்கள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இவர் இணைய இதழ்களில் சிறுகதைகளை எழுதி வருகிறார் இவருடைய சிறுகதைகள் பலராலும் வாசிக்கப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது அதில் ஓரிரு கதைகளை இவரது மாணவர்கள் குறும்படமாகவும் எடுத்து வருகிறார்கள்.

படைப்புகள்