1 POSTS
கதை ஆசிரியர் தமிழ்நாடு அரசின் உள்ளாட்சித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர் ஆவார். ஓய்வுக்காலப் பணியாக கடந்த பத்தாண்டு காலமாக, வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.
ஆறு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டு அதன் அடிப்படையில் “ தமிழக வரலாற்றில் பெரம்பலூர்” என்னும் தலைப்பில் பெரம்பலூர் மாவட்ட வரலாற்று ஆய்வு நூலினை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வரவேற்பினைப் பெற்ற இந்நூல், 2018ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த வரலாற்று நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையால் பாராட்டும், பரிசும், பணமுடிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர், ” தமிழ்த்தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும் “ என்றத் தலைப்பில் மற்றொரு நூல் எழுதி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நூல்கள் எழுதி வருகிறார். இவர் எழுதிய பல கட்டுரைகள் ”தி இந்து தமிழ் திசை” நாளிதழிலும், ”பேசும் புதிய சக்தி” மாத இதழிலும் வெளிவந்துள்ளன.