1 POSTS
இயற்பெயர்: சோ.சுப்புராஜ். படிப்பு: B.E. (Civil) கட்டிடப் பொறியாளர். சில்வியாமேரி என்கிற புனைப்பெயரிலும் அவ்வப்போது கதை கவிதைகள் எழுதுவதுண்டு.
எண்பதுகளின் மத்தியிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கணையாழியில் முதல் கதையும் தீபத்தில் முதல் கவிதையும் பிரசுரமானது.
தமிழின் முக்கியமான வார, மாத இதழ்களில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சுமார் இருபது கவிதைகளும், ஐந்து குறுநாவல்களும் இரண்டு நாவல்களும் இதுவரை பிரசுரமாகி யிருக்கின்றன.
மூன்று புத்தகங்கள் - துரத்தும் நிழல்கள் மற்றும் பரிசுக்கதைகள் பதினெட்டு என்னும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் ஐங்குறுநாவல்கள் என்னும் குறுநாவல் தொகுப்பும் - வெளியாகி இருக்கின்றன.
இதுவரைப் பெற்ற முக்கியப் பரிசுகள:
1. பரிசுக்கதைகள் பதினெட்டு என்னும் சிறுகதைத் தொகுதிக்கு சௌமா இலக்கிய விருதுகள் – 2020 கிடைத்திருக்கிறது.
2. தினமணிக்கதிரும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி 2017ல் முதல் பரிசு; 2016ல் இரண்டாம் பரிசு மற்றும் 2011ல்மூன்றாம் பரிசு
3. நன்னன்குடி நட்த்திய சிறுகதைப் போட்டி 2021ல் இரண்டாம் பரிசு
4. கவிதை உறவு 2019ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு
5. கிழக்குப் பதிப்பகம் நடத்திய சென்னை சிறுகதைப் போட்டி 2018ல் முதல் பரிசு
6. Tamil Book Library Android Application நடத்திய சிறுகதைப் போட்டி 2018ல் முதல் பரிசு
7. அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டி-2007ல் முதல்பரிசு மற்றும் 2016ல் இரண்டாம் பரிசு
8. பெண்ணே – நீ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி 2008ல் முதல்பரிசு
9. இலக்கியபீடம் 2016ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு மற்றும் 2015ல் மூன்றாம் பரிசு
10. தினமலர் – வாரமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் 2015ல் இரண்டாம் பரிசு
11. அமுதசுரபி நடத்திய குறுநாவல் போட்டி 2017யில் இரண்டாம் பரிசு; சிறுகதைப் போட்டி 2019ல் இரண்டாம் பரிசு
12. அக்கினிக்குஞ்சு இணைய இதழ் நடத்திய குறுநாவல் போட்டி 2016ல் முதல் பரிசு
13. அருளரசி வசந்தா நினைவு சிறுகதைப் போட்டி 2016ல் முதல் பரிசு
14. அய்க்கன் நினைவு சிறுகதைப் போட்டி 2020ல் முதல் பரிசு
15. அவுஸ்திரேலியா வானொலி - வானமுதம் ஒலிபரப்புச் சேவை நடத்திய சிறுகதைப் போட்டி 2016ல் இரண்டாம் பரிசு
16. காக்கைச் சிறகினிலே முன்னெடுத்த கி.பி. அரவிந்தன் நினைவு புலம்பெயர்வு ச்சிறுகதைப் போட்டி 2016ல் மூன்றாம் பாரிசு.
17. விளம்பரம் என்னும் இணைய இதழ் 2015ல் நடத்திய உலகளாவிய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு
18. இலக்கியச்சிந்தனையின் மாதப்பரிசு – 1988 & 2016
19. வெட்டி பிளாக்கர்ஸ், தமிழ்ப் பிரவாகம் என்னும் இணையதளங்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் இரண்டாம் மற்றும் ஆறுதல் பரிசுகள்
20. அன்புடன் இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியிலும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள்
21. அமுதசுரபி - வை.மு.கோதை நாயகி அம்மாள் நினைவு சிறுகதைப் போட்டி 2020ல் இரண்டாம் பரிசு
22. இலக்கியபீடம், அமுதசுரபி, கல்கியின் பொன்விழா, தினமலர் - வாரமலர் இதழ்கள் வெவ்வேறு வருடங்களில் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் ஆறுதல் பரிசுகள்