யமுனா வீடு

தொடர் கவிதைகள் - 3

- Advertisement -

வாரத்தில் ஏதேனும் ஒருநாளில்
யமுனாவோடு உரையாடுவது
வாசுவிற்கு பிடிக்கும்
கடந்த வாரத்தில் வாசித்த அத்தனை கதைகளையும்,
கவிதைகைளையும்
வாசு ஒப்பித்தபடி இருப்பான்.
இறகொன்றால் காதைக் குடைந்தும்
வாசு வாங்கிகொடுத்த சித்திரப் புத்தகத்தில் கோடிட்டபடியும்
பிடித்தமான பொரிஉருண்டையை வைத்து விளையாடியபடியும்
கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும்
வாசுவின் கதையை
ஒரு நேரத்தில் நிறுத்தச்சொல்கிறது
உச்சஸ்தாபியில் எழும் யமுனாவின் குரல்
மழைக்காலப் பாடலொன்றின் பெரும் பிளிறலாக
காற்று வெளியெங்கும் வெடித்துச் சிதறும்
யமுனாவின் குரலே
அடுத்த வாரத்தில் இன்னும் சில கதைகளை வாசிக்கச்செய்கிறது.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -