யமுனாவீடு – 84

தொடர் கவிதை

- Advertisement -

எங்கு நானிருக்கிறேன்
யோசனையுடன்தான்
கனவைப் பேசுகிறேன்
கடவுளின் ஒளிகொண்ட
அவள் வந்துவிடுவாள்

ஒரு சீட்டுக்கட்டை கலைத்து போடுவதுபோலத்தான்
அந்தக் கனவைக் கண்டேன்
யோசனையுடன்தான் சொல்கிறேன்
அவள் வந்துவிடுவாள்

முடிந்த ஒன்றை
ஆரம்பிப்பதிற்கு
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு இடத்தில்
ஒவ்வொரு விதமாய் இருக்கிறோம்
மெழுகுவர்தியை ஏற்றிவையுங்கள்

இங்கு எல்லோருக்கும்
ஒரு பதில்வேண்டும்
ஒரு சொல் போதும்
எதிர்பார்ப்பதையே
அறுவடை செய்திடலாம்
ஒருமுறை மெழுகுவர்தியை ஏற்றிவையுங்கள்

காதலைச் சொல்லலாம்
காதலில் இருப்பதைச் சொல்லலாம்
ஆன்மாவைத் தேடி
கற்பனையாய் ஒன்றைச் சொல்ல
அவள் வந்துவிடலாம்

இறந்துபோனவர்கள்
எல்லோருக்கும் கேட்கக்கூடிய
நற்செய்தியாய் இருக்கட்டும்
அன்பு நிறைந்த யமுனா
இதை நீ சொல்லவேண்டும்

மெழுகுவர்தியை ஏற்றிவைக்க
எந்தத் திசையிலாவிலிருந்து
கடவுளின் ஒளிகொண்ட
அவள் வந்துவிடலாம்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -