இந்தக்கதையின் முதல்ப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்
நல்லா வந்து மட்டிக்கிட்டோம் இது ரொம்ப வருசத்துக்கு முன்னால எறிஞ்சி போன குறவன் காலனி.
இந்த இடத்தை எடுத்துக்க இங்க இருந்தவங்களை
உயிரோட வச்சி எறிச்சிட்டு அப்புறமா கட்டின நாகேந்திரன் பங்களா.
இறந்துபோன எல்லோரோட ஆத்மாக்களும் இங்கதான் அலஞ்சிட்டு இருக்றதா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.
அதை உண்மையான்னு தெரிஞ்சிக்கதான் இங்க வர நினைச்சேன்…ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போதான் புரியுதுன்னு வினோத் சொல்லி முடிக்க.
படார் படார் படப்படப்பட
இடி தலைல விழுற மாதிரி நெருக்கத்துல சத்தம்.
ஓஓஓ…………………………
ஹா ஹா ஹா…………… மாட்னிங்களா…………….
சின்ன பசங்களா ………..
இப்படி மாறிமாறி சத்தம் வேற.
இப்போ, அந்த குரல் தூரமா போச்சி
திரும்பவும் வினோத் சொல்ல தொடங்கினான்.
அதுனாலதான் இதை கட்டின நாகேந்திரன் குடும்பம் வம்சமே இல்லாம அழிஞ்சி போய்டுச்சின்னும்.
அவங்க ஆத்மாவும் இங்க தான் இருக்குன்னும்.
::’ஏய் அந்த விளக்க எடுத்துட்டு வா’
(கம்பிராமான குரல் )
அய்யா …இதோ வரேன் யான்னு
( பணிவான குரல்)
அப்போ அந்த அதிகார அழைப்பு. நாகேந்திரநோட தான் இருக்குமோ..எனக்கு சந்தேகம் எல்லாம் பயமா மாறிடுச்சி.
இங்க இருந்துது வெளிய போக என்ன..? வ…..ழி…..ஆஆஆ யார்ரா நீங்க பேசிட்டு இருக்கப்போ வாயில உதைக்கிறீங்க …
வழி க்கு வாய் குழரி எல்லா லியும் வருது..வெளில போக வழி இருக்காடா??
அவங்க பேயா ஆகியும் ரெண்டு குடும்பத்தோட பிரச்சனை இன்னும் தீர்ந்த பாடில்ல,வினோத் கதையை நிறுத்துறதா தெரியல.
டேய் லூசு வெளிய போக வழி இருக்கான்னு கேட்டேன்….
அதுவரை பேசிட்டு இருந்த குரல் இப்போ அமைதியாச்சி.
டக்…. டக் …..டக்…..அங்க யாரோ நடந்து வர சத்தம்.இவ்வளவு நேரம் வரலாறு சொல்லிட்டு இருந்த குரல் மங்கிடுச்சி..
திடீர்ன்னு…
“ஹய்யோ அய்யா சாமி கும்புடுறேன் எங்களை வுற்றுங்க சாமி.,
நாங்க புள்ள குட்டிங்களோட எங்கயாச்சும் போய் பொழச்சிகிறோம் சாமி…..
அரசாங்கம் குடுத்த எடமும் வேணாம் ஒன்னும் வேணாம்,உங்க கால பிடிச்சி…..கெஞ்சி”
ஆஆஆ…….அம் ….மாஹய்யோ ..ஆஆஆ ஆ
இவ்வளவு நேரம் அந்த அறையில வந்த ஆண்கள்,பெண்கள், குழந்தைகளின் அலறல்
சத்தம் முனகலா மாரி இப்போ அமைதியா அடங்கிடுச்சி. மழை பேஞ்சி ஓஞ்ச மாதிரி.
இது அந்த குறவன் …..?
ஆமா அவங்க குடும்பத்து………..
ஸ்ஸ்ஸ் யாரோ வர மாதிரி இருக்கு.
::டேய் இன்னுமா விளக்கு எடுக்கிற
யாருக்கிட்ட வச்சிக்கிறானுங்க ஒழிச்சிகட்டிடுறேன் இன்னிக்கு. ஹிம் …….அந்த கம்பிரா குரல் எனக்கு நெருக்கமா கேட்டுச்சு.
ட்ரிங்ட்ரிங்…ட்ரிங்ட்ரிங்க்……
ட்ரின்…..
ஹியோ யெஸ் நாகேந்திரன் ஸ்பிக்கிங்……
ஹா ஹா ஹா ஹா
இடி இப்போ நிஜமாவே என் தலைல விழுந்துச்சி.
::இங்க வந்து மாடிக்கிட்டானுங்க உயிரோட விடமாட்டான் ஒருதனையும்..
டேய்…….. ன்னு பெரிய கோபத்தோட அவன் எழுப்பின சத்தத்தோடு இடியும் மின்னலும் ஜோடி சேந்துகிட்டு அசாதாரண அச்சத்த ஏற்படுத்திட்டு.
கை,கால் எல்லாம் நடுங்குது மரண பயம், எல்லாம் முடிஞ்சி போச்சுன்னு நினைக்கிறப்போ.
பளிச்சுன்னு ஒரு வெளிச்சம்
என் முன்னால வந்து நிக்குது இவன் இங்க இருக்கான்னு அந்த வெளிச்சதுக்கும் பின்னால இருந்து ஒரு கூச்சல்.
இது வேற ஒரு முகம்.
பெரிய மீசை அப்படி ஒரு கருப்பு சிவந்துபோன கண்ணு ஓரிரு வினாடி தான் அந்த முகத்தை பாக்க முடிஞ்சலும் அவ்வளவு பயங்கரமான முகம்ன்னு மனசுல பாதிஞ்சிட்டு.
கையில பிடிசிட்டு இருந்த மெழுகுவர்த்தியை ஊதி அச்சிட்டுபிடிச்சி தள்ளி விட்டுட்டு ஓடினேன்.மச்சான் ….
வினோத்து எங்கடா இருக்கன்னு கத்திக்கிட்டே ஒடுறேன்… ஒடுறேன் கால்ல ஏதோ தட்டுப்பட்டு தடுமாறி விழுந்து உருண்ட இடம் முழுசா பிசுபிசுப்பு …..
ரத்தம் போல என்கால இடறிய இடத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து போனேன்….சின்னதா மூச்சி சத்தம் ஈனசுவரத்துல மச்சான் எப்படியாச்சும் தப்பிச்சிடு டா….
என் அம்மா,அப்பா,அக்காவ பாத்து நான் யார்கூடவோ வேற ஜாதி பொண்ணோட ஓடிட்டேன் ன்னு சொல்லுடா. என்ன மறக்கலனாலும்,வெறுத்துட்டா என்ன தேட மாட்டாங்க கவலை படமா இருப்பாங்க……
ப்ளீஸ் மச்சி……..ம்ம்ம்ம்ம்….
வினோத்தொட தலையை என் மடியில் வச்சிட்டு கதறி அழுதேன்…
அவன் கைய வச்சி என் வாய்ய பொத்தி சத்தம் போடாத…
ஸ்ஸ் ஸ் ஸ் ஸ்…எச்சரித்தான்.
மச்சான் உனக்கு ஒன்னும் ஆகாது ஒன்னும் ஆக விட மாட்டேன்…
அ அஜ ய் எங்கடா….
கொஞ்ச நேரத்துக்கு முன்னால சத்தத்தோடு வெளியில ஓடுன மாதிரி இருந்துச்சில அது அவனாதான் இருக்கும்.
அப்போ வெளிய போக ஏதோ வழி இருக்கு கண்டிப்பா.
நான் பாத்துட்டு வரேன்…
உனக்கு ஒன்னும் ஆகாது மச்சி நாம வெளில போவோம் ன்னு சொல்றப்போ முன்ன வழிஞ்சி ஓடின வேர்வை,ரத்தம் எல்லாம் காஞ்சிபோய் இப்போ கண்ணீர் பெருகுது…
இல்ல மச்சி அவன் வச்சிருந்த குலசாமி தாயத்து தான் அவனை காப்பதிருக்கு நம்ம கிட்ட ஒன்னும் இல்லையே…
ஏன்டா சாமி கயிறு
கட்டினாதான் காப்பாத்துமா,
ஆபாத்துன்னு வந்தா யாரா இருந்தாலும் காப்பாத்தனும் ல.
கடவுளே நீ இருக்கது நிஜம் தானா..?
ப்படடார்ர்ர்ர்ர்ர்…
ன்னு பெரிய சத்தம் காதுலாம் ரிங்ங்ங்ங்குது அப்படி ஒரு சத்தத்த வாழ்நாள்ல கேட்டதே இல்ல
சடசடசட ன்னு நெறய காலடி சத்தம் பங்களாக்கு வெளில…ஓடுது….வெளில தீபிடிச்சி எரியுது.. ஏதோ
கடவுளே வந்துடார்ன்னு என் மனசு சொல்லுது.
தப்பிக்க போறோம்.
அதுக்கு,ஆமாம் சொல்ற மாதிரி
ட்ரிங்ட்ரிங்….ட்ரிங்ட்ரிங்…..ன்னு போன் அடிக்குது….
இதுதான் நேரம் ன்னு தடுமாறி விழுந்து ஓடி வந்து எடுத்துட்டேன் அந்த பக்கத்துல இருந்து
‘சார் …..ஹெலோ’ அந்த குரல் என்ன உறைய வச்சிட்டு.
‘சார் ..கேக்குதா ஹெலோ’…
ம..ம..ம… மச்சிசிசி அஜய் எப்படியாச்சும் காப்பாத்துடா
நம்ம வினோத் செத்துடுவான் போல….ஓரே த்தம் ….ரத்தம் போயிட்டு இருக்குடா………..
மச்சி……. மச்சி….டேய்.
அடிச்சானுங்களா….
பொய் கேசு போட்டு ஆளையே முடிக்கப்பாக்குராணுங்களா த்தா….**
அழுகாதடா….நா இப்போ வக்கில் சார் கூட தான் வந்துட்டு இருக்கேன் எப்படியும் அரைமணி நேரத்தில அங்க வந்துடுவேன்..
வெளில வேற செமமழை….
எங்கேயோ ஏதோ அணை வேற உடச்சிக்கிட்டாம்…நீங்க இருக்க..
D1 போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் முழுகிடும் ன்னு சொல்றாங்க..
ஹாலோ….ஹாலோ…மச்சி
ஹெலோ ….
walkie-talkie சத்தம் …
R1 ஸ்டேஷன் ரிபோட்டின் சார் ஓவர் ஓவர்…
D1 ஸ்டேஷன் ரிசீவிங் சர்
ஓவர்…ஓவர்
அதிகமான தண்ணி வந்துட்டு இருக்கு .செல் ல யாரையும் வச்சிகாதிங்க..
ஸ்டேசனே முழுக வாய்ப்பு இருக்கு…
பக்கத்துல இருக்க பொதுமக்கள உயரமான பகுதிக்கு போக சொல்லி அலர்ட் பண்ணுங்க..
ஓவர் ஓவர்…
டக் ன்னு கரண்ட் வந்துச்சி நான் ரிசிவர வச்சிகிட்டே உறஞ்சி நிக்கிறேன்….என்ன நடந்துட்டு இருக்கு நாம நிக்கிற இடம் போலிஸ் ஸ்டேசனா???
வெளில எறிஞ்சிட்டு இருக்கிறது போலிஸ் வேனா? அணைக்க போன எல்லாம் திரும்பி வந்துட்டு இருக்கப்போதான் தெரியுது கொஞ்ச முன்னால வந்த சத்தமும், நெருப்பும் வண்டி மேல விழுந்த இடின்னு.
இன்ஸ்பெக்டர் கர்சித்தார், ஜெனரேட்டர ரெடி பண்ண இவ்வளவு நேராமாயா..போ போய் எல்லா செல் ல்லையும் திறந்து இருக்க ஆளுங்களை வெளிய கொண்டுபோங்க …
‘அய்யா அந்த குறவன் காலனி ஆளுங்க’ ..?
அதுவே இப்போ முழுக போகுது யாருக்குமே கிடைக்காம போகபோற நிலத்துக்கு ஏன் தேவயில்லாம இவனுங்கள.
சொன்னதை செய்யியா கேள்வி கேக்காம.
டேய் நீ எப்படி இங்க வந்த..? போன் ல யாரு…?
டேய் உன்னதான் கேக்குறேன்.
போன் ல யாரு.?
ஹலோ ஹலோ….
டேய் தமிழ் கேக்குதா ………
மச்சி கேக்குதா….
நான் உன் மச்சி இல்ல இன்ஸ்பெக்டர்
நாகேந்திரன் பேசுறேன்.
என் கையில இருந்து ரிசீவரை பிடிங்கி அவர் சொன்னார்.
“சார் …நான் தான் நீங்க பிடிச்சிட்டு வந்த மூணாவது ஆள்”
பிலடி 420 நீயா கான்ஸ அடிச்சிட்டா ஓடுற. கண்டிப்பா என் கைல மாட்டுவ அன்னைக்கி இருக்கு உனக்கு.
“சார் சார் ப்ளீஸ். அண்டர்ஸ்டாண்ட் நாங்க எந்த தப்பும் பண்ணல,நான் போன வக்கில் போஸ் சார் கிட்ட கொடுக்கிறன் பேசுங்க”
யாரு……..
நான் தான் யா..
சுபாஷ் சந்திரன் .
சுப்ரிம் கோர்ட் ல….
சார் நீங்களா… உங்களை தெரியாமலா ….சொல்லுங்க சார் .பசங்க வேண்டிய பெரிய இடத்து பசங்களா….???
ஏன் பெரிய இடம் ன்னு சொன்ன சார்ஜ் சீட்ட கொழுத்திட்டு பசங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு வெளில அனுப்பி வைப்பியா..
என்னய்யா நினைச்சிட்டு இருக்கீங்க சட்டம் கடமையை காசு இல்லாதவன் கிட்டையும், இருகவன்கிட்ட கை கட்டியும் நிக்க கூடாதுயா…
என்ன கேஸ்…..இது.?
சார் actually ,இந்த குறவன் காலனி பிரச்சனை போய்ட்டு இருக்கு.. அமைச்சர் கட்சி ஆஃபீஸ் கட்டின இடம்…. உங்களுக்கு தெரியும் ன்னு நினைக்கிறேன்…
ஆமா ஆமா.. தெரியும் சொல்லுங்க
அது சம்மந்தமா விசாரணை போய்ட்டு இருந்துச்சு..
அந்த நேரத்தில..
ஸ்டேஷன் வாசல் ல வந்து கிடந்தவனுங்க..
அவனுங்களா தான் உள்ள வந்தானுங்க ஒரே கூச்சல்.
கரண்ட் வேற போச்சி. மெழுகுவர்த்தி எடுத்துட்டு ஜெனரேட்டார் ரிப்பேர் பண்ண போனா…
ஊதி ஊதி அனச்சிட்டு அலரிட்டு அங்கேயும் இங்கையும் ஓடுறானுங்க.
ஸ்டேஷன் க்கு வர போன்கால்ஸ்ஸ அட்டன் பண்ண போன நம்ம கான்ஸ்டபிள அடிச்சிருக்காங்க, இன்னொருத்தன்
தப்பிக்கிறேன் ன்னு சொல்லி ரெனோவேஷன் நடந்துட்டு இருக்க ரூம் லா வச்சிருந்த பைண்ட் லாம் தள்ளி விட்டுட்டு அது என்னமோ அவனோட ரத்தம் போல…ஆஅ ஊ ன்னு என்னா நடிப்பு நடிக்கிறான் சார்.
இவனுங்க குடிச்சதால இப்படி பண்ணல. ஏதோ ட்ரக், இவனுங்க வந்த வண்டில மாட்டி இருந்துச்சின்னு ஏட்டு எடுத்துட்டு வந்து கொடுத்தார் அதுல காளான் போல ஏதோ அப்புறம் அரண்மனை பட டிக்கெட் இருந்துச்சி.
அதான்,வேலை தேடி வந்த ஊர்ல வந்த காரணத்தை மறந்துட்டு இப்படி போதைக்கு அடிமையா போராணுங்களே ன்னு திருந்தட்டும்னு வச்சி வெளுத்து விட்டேன்…
மத்தபடி கேஸ் லாம் எழுதல சார்.
அதுலயும் உங்க கூட இருக்கான் பாருங்க அவன் ரொம்ப டேஞ்சர் சார் எங்க எல்லோரையும் பேயாவே நினைச்சிட்டு டார்ச்சர் பண்ணிட்டான்.
கீ செயின் ல இருந்த தாயத்த காட்டி சாத்தானே அப்பலே போ ன்னு …ஏன் கேக்குரிங்க.
நீங்க இங்க வர வேணாம் ,வெள்ள அபாய எச்சரிக்கை குடுத்து இருக்காங்கா அந்த பயலுக்கு சேவுள்ளே ரெண்டு போட்டு வீட்டுக்கு அனுப்பி வைங்க.
சாரி Mr.நாகேந்திரன் ,
சாரி டு டிஸ்ட்ரப் யூ..
அண்ட் அந்த நில பிரச்சனையா அப்புறம் பேசுவோம்.
ஐ வில் ஹண்டில் தட்.
யூ டேக் கேர் .
thank you சர் …சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் ன்னு ரெண்டு பேரும் பேசி முடிக்க.
வக்கில் சொல்லிருக்கார் வண்டிய திருப்புப்பா வீட்டுக்குன்னு,அஜய்யோ சார் நேர்மையானவரன்னு உங்க கிட்ட வந்தா நீங்களும் காசுக்கு விலை போய்ட்டீங்களே……ச்சா அப்படின்னு சொல்ல..தம்பி ஒரு நிமிஷம் கீழ இறங்குப்பா ன்னு சொல்லி காது சவ்வு கீழிற மாதிரி ரெண்டு விட்டுருக்கார்,குடிச்சிட்டு வண்டி ஓட்டுறதே தப்பு இதுல போலிஸ தப்பு சொல்றிங்க,உங்களை ஹெல்மெட் போட சொன்னா,ட்ராபிக் ரூல்ஸ் பாலோ பண்ணசொன்ன, போலீசை கெட்டவனா நினைக்கிறீங்க.
இர்ரெஸ்பான்சிபிள் இடியட்ஸ்.
ஸ்டேஷன் ல திரும்ப walkie-talkie சத்தம் ,சார் E1 ஸ்டேஷன் ரிபோர்டிங் சார் ஓவர் ,யெஸ் D1 ஸ்டேஷன் ஹியரிங் ஓவர்…சார் அல்மோஸ்ட் வெள்ளம் உங்க பகுதிக்கு வந்தாச்சு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேர சேவ் பண்ணுங்க…
இட்ஸ் மை டூட்டி சார்.ஓவர்….. கான்ஸ் கெட் ரெடி
நானும் வினோத்தும் வெட்கி தல குனிஞ்சு நினோம்.
“சாரி சார்”
இப்போ அதுக்கெல்லாம்
நேரம் இல்லடா…
ஓடுங்க அக்கம் பக்கத்துல இருக்க பசங்கள ஓன்னு சேருங்க. முடிஞ்ச அளவுக்கு பப்ளிக்க சேவ் பண்ணுங்க.
***************************
நல்ல த்ரில்லர் கதை ??