யமுனா வீடு – 21

தொடர் கவிதை - 21

- Advertisement -

குழந்தையின் ஒளிநிறைந்த
கருணை முகம் யமுனாவிற்கு

கசடு நீங்க பிரார்த்தனை செய்யும்
வழி தொலைத்த
ஒருவனின் கனவில் வந்து சொல்கிறாள்
ஒற்றைப்பிரியத்தின் ஜனன கதை ஒன்றை

கதையும் உரையாடலும்
அவனை குற்றவுணர்சிக்கு இட்டுச்செல்ல
உரையாடலில் அவனது உணர்வுகளை கிளறிவிட்டு
அவள் உடைந்துவிடுகிறாள்.

அவனின் தலைகோதி கண்களில் முத்தமிட்ட யமுனா
தொட்டுணரமுடியாதவள்

பிறகு, பார்த்துச் சிரித்த யமுனா
அன்பெனும் கடலாய்
அவனை அரவணைத்து உறங்கிப்போகிறாள்.

விழித்து எழுந்தவன்
ஒரு குவளை தண்ணீரை பருகிவிட்டு
யமுனா வந்த கனவில் படுத்து உறங்கிப்போகிறான்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -