யமுனா வீடு – 71

தொடர் கவிதை

- Advertisement -

முகத்தோடு பேசிய மனிதர்களிடத்தில் தான்
எத்தனை மாயங்கள்

ஒவ்வொருவரும்
தனித்தனியானவர்கள்

தனியானவர்களும்
ஒரு கணத்தில்
காணமல் போய்விடுகிறார்கள்

மறு கணத்தில்
இறந்தவர்களாகி விடுகிறார்கள்

மரணித்தவர்களை
மன்னித்துவிடுகிறோம்

பிறகொருநாள்
தேநீர் கோப்பையோடு
உயிர்த்தெழுவார்கள்

நீங்கள் சிரிக்கவேண்டும்
சத்தம் போட்டு பேசவேண்டும்
இன்னொருமுறை கடக்கவேண்டும்

மறதியின் காரணமாக
இறந்தவர்களை
மன்னித்துவிடுகிறோம்

நாம் பார்ப்பெதெல்லாம்
அவரவர் சார்ந்த நலனெனும்போது
இங்கு உனக்கு நீ தான்

வாழும் கொஞ்ச காலம்
இந்த உலகத்தில்
எங்கு போகப்போகிறாய்?

போ போ
யமுனாவைத் தேடு.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -