யமுனாவீடு – 69

தொடர் கவிதை

- Advertisement -

எங்கிருந்து பார்த்தாலும்
நாம் இருவரும்
வெவ்வேறானவர்கள்.

இங்கு ஒருவரும்
தண்டிப்பதில்லை
அவரவர் கற்பித்துக்கொண்டது

நம்முடைய வாழ்க்கை
ஒரு பொழுதில்
யாரிடமோ பந்தயம் கட்டுகிறோம்

ரோட்டில் இறங்கி நடந்துபாருங்கள்
தொட்டுவிடும் தூரமில்லை
கிளைக்கும் பாதையில் தொலைந்துபோகவேண்டும்

கை நீட்டி யாரவது அழைக்கலாம்
ஏமாற்றமில்லை
ஒரு தேநீரை பகிர்ந்து குடிக்கலாம்

மழையில் நனைந்து செல்
முவடிவற்றதொரு நாளில்
ஒரு அற்புதம் நிகழலாம்

யமுனாவின் புன்னகை உனக்குள்ளிருக்கும்
மனதுக்குள் பறக்க
ஆரம்பித்திருப்பாய்

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -