அரவமற்ற நள்ளிரவில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்
பழக்கமாகிவிட்டது
நிகழ்ந்த ஒன்றை
கலைத்துப்போடுகிறேன்
கற்றுக்கொள்ள வேண்டும்
கண்ணுக்கெட்டியதூரம்வரை
கடல்தெரிகிறதென்று
எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாது
கடைசியாக ஒரு சொல்
கதையை முடித்துவிடலாம்
பத்திரிக்கையில் இடம்பெறாத செய்தியாக இருக்கட்டும்
ஏதோஒரு நாளில்
மகிழ்ச்சியாக இருந்தேன்
கனவுகளைப் பற்றிச்சொல்கிறேன்
பெருவனத்துக்காளி பார்க்க
விழிகளில் திரண்டநீர்
உனக்கானது
கண்டடைவது எனக்கானது
நேசம் உயர முத்தமிடுகிறேன்
யமுனா
உன்னுடைய நினைவிலிருப்பவன்
மனம்பிறழக்கூடாது.