மெய்நிகர் உலகம் – 4

- Advertisement -

வணக்கம். சென்ற பகுதியில் பணம் என்னும் மெய்நிகர் உருவாக்கத்தில் மூன்று வெவ்வேறு விதமாக எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்று பார்த்தோம். அதில் மூன்றாவதாக இருக்கும் வருங்கால மதிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்.

மனிதன் ஆதி காலத்தில் இருந்தே தன்னுடைய எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தான். முதலில் அது உணவு பொருளாகவோ அல்லது உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக இருந்தது. உணவுப்பொருட்களை நாம் ஏற்கனவே பார்த்தது போல் ஒருசில காலமும் அசையாச் சொத்துக்களை நிரந்தரமாகவும் சேமித்து வைக்க முடிந்தது. ஆனால் காலப்போக்கில் பணத்திற்கு ஈடாக நாணயங்களும் பணமும் வந்த பின்பு அதனை மேலும் எளிதாக சேமித்து வைக்க முடிந்தது. இப்படி எளிதாக சேமிக்க முடிந்த ஒரு பொருளை வைத்துக் கொண்டு யார் தான் எளிதில் வீணாகும் உணவு போன்ற பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வார்கள்? ஆனால் அனைவருமே பணத்தை மட்டும் சேமித்து வைத்துக்கொண்டால் யாராவது உணவை சேமித்து வைத்தால் மட்டும் தானே மாற்றிக்கொள்ள முடியும்? இந்தப் பிரச்சனைக்கு இப்படி ஒரு முடிவு காண்பது எனும் போது தான் பணத்திற்கும் மதிப்பு மாறும் தன்மையை உருவாக்க வேண்டியிருந்தது. பணம் என்பது நாம் கற்பனையாக உருவாக்கிய ஒரு மெய்நிகர் வரையறை தானே? அப்படியானால் அதற்கு மதிப்பு மாறும் தன்மையையும் நம்மால் கொடுக்க முடியும்.

இங்குதான் பணத்தின் வருங்கால மதிப்பை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பொருளை நூறு ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே பொருளை ஒரு ஆறுமாதம் சென்று வாங்கும் பொழுது அது 100 ரூபாய் மட்டும் தான் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அதன் மதிப்பு கூடவோ அல்லது குறையவோ செய்திருக்கலாம். இந்த நிலையில் அந்தப் பொருள் ஆறு மாதங்களில் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக மாறி விடும் என்ற உத்தரவாதம் இருந்தால் உங்களுடைய பணத்தை எப்படி வைத்துக் கொண்டு 6 று மாதம் காத்திருந்து அதை நீங்கள் வாங்குவீர்கள். அதே சமயத்தில் அந்தப் பொருள் ஆறு மாதம் கழித்து 110 ரூபாய் ஆகிவிடும் என்றால் அந்தப் பொருளை இப்பொழுதே வாங்கி சேமித்து வைத்துக் கொள்வீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த பொருளையும் மனதில் கொள்ளாமல் பணத்தை மட்டுமே இது போன்று ஒரு இடத்தில் சேமித்து வைத்து அதனை வருங்காலத்தில் நிலைமைக்கேற்ப கூட்டவோ குறைக்கவோ வைக்கலாம் என்றால் எப்படி இருக்கும் போதும்? இதனையும் நாமே கண்டுபிடித்து பொருள்கள் எவ்வாறு விலை மற்றும் மதிப்பு மாறுமோ அதுபோலவே பணத்தின் மதிப்பையும் மாற்றுவதற்கு ஒரு மெய்நிகர் வரையறையை உருவாக்கினோம். 

படத்திற்கான மெய்நிகர் வரையறையை உருவாக்கிய பின்பு அதனை சேமித்து வைத்து மதிப்பு மாற்ற ஏற்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட இடம்தான் வங்கிகள்! நீங்கள் வங்கிகளில் சேமித்து வைக்கும் பணம் மாறிக்கொண்டே வரும்போது உங்களுக்கு நன்றாக தெரியும். குறிப்பாக சொல்லப்போனால் நீங்கள் வைத்திருக்கும் காலத்திற்கு ஏற்றார்போல ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாக அதில் அதிகமாக கொண்டே வந்தால்கூட அதற்கு அடிப்படை மதிப்பு என்று ஒன்று உள்ளது. அது காலம் செல்ல செல்ல குறைந்து கொண்டேதான் வரும். நீங்கள் ஒரு பழத்தை வாங்கி அதனை சாப்பிடாமல் வைத்திருந்தால் காலப்போக்கில் அது எவ்வாறு கெட்டுப் போகுமோ அதுபோலவே பணமும் சிறிது சிறிதாக அதன் மதிப்பை இழந்து கொண்டே வரும். இதனை தன் பணவீக்கம்(inflation) என்று கூறுவார்கள். நீங்கள் உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் இதற்கு எதிர்மறையான பணவாட்டம்(Deflation) கூட சில சமயங்களில் நடந்துள்ளது. ஏன் இவ்வாறு நடக்கிறது? நாம் இதுவரை பார்த்த அனைத்தும் பணத்தை ஏதாவது ஒரு பொருளுடன் ஒப்பிட்டு மாற்றம் செய்து கொள்ளும் முறை மட்டும்தான். ஆனால் மனிதர்களாகிய நாம் நம்முடைய உழைப்பு மற்றும் சேவையை தொடர்ந்து ஒருவருக்கு அல்லது ஒரு குழுவுக்கு செய்து கொண்டு வருகிறோம் அல்லவா? இதற்குண்டான மதிப்பையும் ஏதாவது ஒரு வழியில் கொண்டு வரவேண்டும் எனும் முயற்சியில் உருவானதுதான் நீங்கள் இன்று பார்க்கும் பங்குச் சந்தைகளும் தொழில் நிறுவனங்களும். பணத்தை எவ்வாறு ஒரு ஒரு சேவையுடன் ஒப்புமை செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மெய்நிகர் ஒப்புமைகளையும் அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன். அதுவரை நன்றி

-மீண்டும் சந்திக்கலாம்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -