மெய்நிகர் உலகம் – 12

- Advertisement -

வணக்கம். விளையாட்டு என்பது எப்படி யுத்தத்தின் மெய் நிகர் வடிவமாக இருக்கிறது என்பதை சென்ற பகுதியில் சொல்ல தொடங்கி இருந்தேன். அதனை இன்னும் விளக்கமாக இந்த பகுதியில் பார்க்கலாம்.

ஆதிகாலத்தில் மனிதன் உணவுக்காக வேட்டையாடிக் கொண்டிருந்தான். அதிலும் குறிப்பாக காட்டு விலங்குகளை வேட்டையாடும் போது மனிதன் இறையை பிடிக்கவில்லை என்றால் அந்த விலங்கு மனிதனை வேட்டையாடி விடும். நிகழ்காலத்தில் உள்ளது போல் பணம் கொடுத்து உணவு சாப்பிடும் பழக்கம் மிகவும் சமீபமாக பணம் என்னும் மெய் நிகர் வடிவம் வந்த பின்பு தான் உருவானது. இப்படி வேட்டையாடி சாப்பிடும் பொழுது பல்வேறு ஆபத்துகளும் இருப்பதால் வேட்டையாடுவது எப்படி என்பதை ஒரு விளையாட்டாக உருவாக்க முனைந்தான். இந்த விளையாட்டில் அவனுடைய குழுவில் இருக்கும் சிறுவர்களுக்கும் பயிற்சி கொடுக்க முடிந்ததால் ஆனால் தனக்கு பெண்ணுறு வலிமையான சந்ததியையும் உருவாக்கி வைக்க முடிந்தது.  வேட்டைக்கு இரும்பு முதலான கனமான பொருட்களால் செய்த கூர்மையான பொருட்களை வைத்திருந்தனர். ஆனால் பயிற்சியின் பொழுது மரத்தினால் செய்த கூர்மை இல்லாத வாழ்க்கையை தான் பயன்படுத்தினர். முதல் விளையாட்டு என்பது இங்கு இருந்து தான் உருவானது. இன்று கூட உங்களால் ஒலிம்பிக் போட்டியில் இருக்கும் கத்தி சண்டை போட்டியை பார்த்தால் இது நன்கு புரியும். 

சரி. முதலில் விளையாட்டின் மூலமாக ஒரு வித்தையை கற்றுக் கொள்ளும் முயற்சியை மனிதன் மேற்கொண்டான் என்பது தெளிவாக புரிந்தாலும், அனைத்து விதமான தேவைகளுக்கும் விளையாட்டை உருவாக்க முடியாது. உதாரணமாக ஒரு சிங்கமோ புலியோ ஒருவனை துரத்தி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும் புலியின் வேகத்தை உங்களால் மிஞ்ச முடியாது. இந்த நிலையை சமாளிப்பதற்காக இயற்கை மனிதனுக்கு கொடுத்த ஹரப்பிரசாதம் தான் பயம் மற்றும் அழுகை. பயம் மற்றும் அழுகையை ஒரு உளவியல் நிகழ்வாக மட்டும் பார்த்து விடாதீர்கள். உங்கள் உடலில் உருவாகும் ரசாயனங்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றக்கூடிய விந்தை இந்த பயத்தில் ஒளிந்துள்ளது. 

நீங்கள் இரவில் சாலையில் தனியாக நடக்கும் பொழுது சில சமயம் சில தெரு நாய்கள் உங்களை துரத்திய அனுபவம் இருக்கிறதா? அந்த நொடியில் உங்களுக்குள் ஒரு புதிய சக்தி எங்கிருந்து பிரவாகம் எடுக்கும். அதன் பின்பு எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் உங்களால் ஓட முடியும். இதற்குப் பின்னால் அட்ரினலைன் என்னும் சுரப்பி காரணமாக இருக்கிறது. இதுபோலவே கோபம், பயம், அழுகை போன்ற அனைத்திற்கும் வேறு விதமான ரசாயனங்கள் உடம்பில் சுரக்கிறது. இந்த சுரப்பிகளின் முக்கியமான நோக்கம் ஒன்றுதான் போரிட்டு ஜெயிக்க முடியவில்லை என்றால் வேறு ஏதாவது ஒரு விதத்தில் சரணடைந்து முடிந்தவரை உயிரை காப்பாற்றிக் கொள்வது தான். இப்பொழுது இந்த சுரப்பியை சுரக்க வைப்பதற்கு உங்களை ஒரு சிங்கத்திற்கு முன்னால் நிறுத்தி வைத்தார் உங்கள் உயிர் போய்விடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அப்படி சிங்கத்தை முன்னால் நிப்பாட்டி வைக்கவில்லை என்றால் உங்களுக்கு பயமே வராது. இங்குதான் உங்கள் உடம்பில் உள்ள சுரப்பிகளை சுரக்க வைப்பதற்காக நீங்கள் மட்டும் தனியாக ஓடாமல் உங்களைச் சுற்றி இன்னும் பலரும் ஓட வைத்து அதில் முதலில் வருபவர்களுக்கு பரிசளிக்கும் வழக்கம் உண்டானது. இப்பொழுது போட்டி மனப்பான்மை உருவாகி எங்கே நாம் தோற்று விடப் போகிறோம் என்னும் பயத்தில் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் தங்கள் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். இப்படிப்பட்ட விளையாட்டுகளை மனிதன் உருவாக்கினால் கூட பிறக்கும் குழந்தைக்கு கூட இந்த குணம் இருப்பதை உங்களால் நன்கு பார்க்க முடியும். காலப்போக்கில் நடந்த பரிணாம வளர்ச்சியில் பிறக்கும் குழந்தைக்கு கூட இந்த குணம் பிறவிலேயே வந்துவிடுகிறது. எப்படி ஒரு மீன் பிறந்த உடனேயே நீந்த கற்றுக் கொள்ளுமோ அதுபோலவே மெய்நிகர் வடிவாக நீங்கள் உருவாக்கிய விளையாட்டு உங்களுடைய ரத்தத்தில் கலந்து ஜீன்களில் எழுதப்பட்டு விட்டது. ஆனால் போரை மையப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் மட்டும் இந்த உலகில் இருக்கவில்லை. அது மேலும் பல பரிணாமங்களை அடைந்து வேறு ஒரு உலகிற்கே சென்றுவிட்டது. அதனை அடுத்த பகுதி இன்னும் விரிவாக கூறுகிறேன்.

அதுவரை நன்றி.

-மீண்டும் சந்திக்கலாம்

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -