முற்றுப்புள்ளி

கவிதை

- Advertisement -

புள்ளி என்பது ஒன்றுதான் அது
வைக்கப்படும் விதத்தில்
இருக்கிறது அதற்கான
அர்த்தங்களும்,அவசியங்களும்

சட்டென்று வைக்கப்பட்ட
முற்றுப்புள்ளிகளில்
சாம்ராஜ்யங்களே அழிந்திருக்கின்றன

சாதாரணமான நாம்
அழியாமலிருப்பது எங்ஙனம்?

முற்றுப்புள்ளிகளுக்கும்,
கமாக்களுக்கும்,
கேள்வி குறிகளுக்கும்,
ஆச்சரிய குறிகளுக்கும்,
தொடர் புள்ளிகளுக்கும் வைக்கப்படும் புள்ளிகளில்
முற்றுப்புள்ளிகளே
ஆக ரணமானவை

அது பெரும்பாலும் ஒன்றை அத்தோடு நிறுத்துவதையே குறியாக கொண்டிருக்கிறது
அளவற்ற சந்தோஷத்தையோ
சில நேரங்களில் மட்டுமே துக்கத்தையும்

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
மதுமிதாhttps://minkirukkal.com/author/madhu_midha/
தமிழின் மேல் கொண்ட அளவற்ற பற்றும்,ஆர்வமுமே இவரை எழுதத் தூண்டியது. சிறு வயதில் இருந்தே தோன்றுவதை எழுதும் வழக்கமுடையவர். "விதைகளே விருட்சமாகும்"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -