மாத்திரைகள்

மூன்று கவிதைகள்

மாத்திரைகள்

- Advertisement -

முதலில் சற்று கடினம்
பழகிய பின்னர் வழுக்கிச்
செல்லும்
தினமும் ஒன்று தவறாமல்
நேரம் கடப்பின் கைநடுக்கம்
தவறவிட்ட நாட்களில்
வேறொருவர் ஆகிவிடுகிறீர்கள்
கோபமடைந்த பொழுதுகளில்
விழுங்கினோமா என்று
நினைவுப்படுத்திக் கொள்கிறீர்கள்
நாளுக்கு ஒன்று தானே
சமாதானம் செய்து கொள்கிறீர்கள்
சில மாதங்களில்
சாப்பிடுவது குடிப்பது போல்
பழகி விடுகிறது உங்களுக்கு
வருடங்கள் கடந்த பின்
வலியும் நோயும்
இலவசமாக வந்து சேர
திடீரென விழித்துக் கொள்வீர்கள்
எதிர்பாராவிதமாக
அதற்குள் அனைத்தும்
முடிந்து விடுகிறது
வெளியே மலைபோல்
நெகிழிகள் குப்பை
உள்ளே உறுப்புகள்
தின்னும்
ரசாயனக்குப்பை

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அர்ச்சனை

வந்தவர் சொல்லச் சொல்ல
அர்ச்சகர் ஆரம்பித்தார்
செல்வம் நாமதேஸ்ய
ராணி நாமதேஸ்ய
மணி நாமதேஸ்ய
சுடர் நாமதேஸ்ய
ரயில்வே காண்டிராக்ட் நாமதேஸ்ய
பைனான்ஸ் நாமதேஸ்ய
சீட்டு நாமதேஸ்ய
டிராவல்ஸ் நாமதேஸ்ய
மூலவரிடம் முடிந்தபின்
சக்கரத்தாழ்வாரிடம்
ஆஞ்சநேயரிடமும்
தொடர்ந்தது
தட்டில் ஐம்பது ஒவ்வொரு முறையும்
அர்ச்சகருக்கு அவ்வளவு சந்தோஷம்
பள்ளியெழுந்த
பகவானுக்கு சற்றே
தலைசுற்ற
பாம்புப்படுக்கையில்
மீண்டும் சயனத்தில்
ஆழ்ந்து விட்டார்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

புகைப்படம்

இப்பேரிடர் காலத்தில்
இவ்வார்த்தைகளைக் கேட்டு
யுகமாகிவிட்டது
‘அப்பா, கொஞ்சம் சிரிங்க’
எனக்குத் தெரியும்
எடுத்ததிலேயே
மிகச்சிறந்த படம்
இதுதான் என்று
என்ன ஒன்று
புகைப்படக் கருவி
எண்ணியலும்
படச்சுருளும் இல்லாத
காகிதக் கருவி

- கட்டுரைப்போட்டி முடிவுகள் -
கண்ணன்https://minkirukkal.com/author/vkannan/
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். வேலை பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில். முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு. செந்தூரம் இதழில் "பூனை புராணம்" கவிதை, தாய் மின்னிதழில் "பந்தி விசாரிப்பு" கவிதை வெளியாகி உள்ளது. இவருக்கு வாசிப்பது, இசை கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது, நல்ல ஓவியங்களை ரசிக்க, பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -