புராணிக ஓவியம்

- Advertisement -

தேசம் முழுக்க

சுற்றி வந்திருக்கிறேன்

பல்வேறு மொழியாலான மனிதர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எல்லாக் கலாச்சாரமும் 

ஏதோ ஒரு இழையில் 

தொடர்பை இணைத்துக்கொண்டிருக்கின்றன

மனித வாழ்வின் 

தீராத கசப்பினூடாக

கனவுகளும் 

புனைவுகளும் 

கொண்டாட்டங்களும் கலந்தே பயணிக்கின்றன

நிலம் மனிதன் இடையேயுள்ள போராட்டம் 

கணிக்க முடியாததாக இருக்கிறது 

என இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே… 

எனக்கு தேச மனிதர்கள் 

கருணை வடிவானவர்கள்

ஆனால் வாழ்வின் தீராத தாகத்துடனே 

வாழ்ந்து மடிகிறார்கள்என்

அனுபவத்தில் இதன் நிலவரம்புக் கோடுகள்

அழிபட்டால் நன்றாக இருக்குமென்றே

தோன்றுகிறதுமற்றபடி இந்தியா 

ஒரு பூடகமாக படிமங்கள்

பெருக்கெடுக்கும் ஸ்தலம்.

வசந்ததீபன்
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2021ல் "கண்ணீர் படராத ஓர் அங்குல மண்" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -