நான் விரும்பும் காந்தி

- Advertisement -

முன்னுரை:-

சுதந்திர இந்தியாவின் “தேசபிதா” என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராவார் பிரித்தானியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரமடைய செய்ததில் இவரின் பங்கு அளப்பரியதாகும்.

அகிம்சை எனும் வழியில் தேசப்பற்றை இந்திய மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மகான் ஆவார் இன்றும் இந்திய அரசியலின் முன்னோடியாக பெருமைப்படுத்தப்படுகிறார்.

இந்தியாவின் அரச அலுவலகங்கள் நிறுவனங்களின் காந்தியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தியா பண தாள்களின் காந்தியின் தலை பொறிக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு மக்கள் இவரை பெருமைப்படுத்துகிறார்கள்.

கல்வி :-

படிப்பில் சுமாரான மாணவராக இருந்தாலும் நேர்மையான மாணவனாக விளங்கினார் தனது 18 வது வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.

வழக்கறிஞர் கல்வியை முடித்து இந்தியா திரும்பி சிறிது காலம் வழக்கறிஞராக மும்பையில் பணியாற்றினார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களின் விண்ணப்படிவங்களை நிரப்பும் பணியை செய்தார் 1893 இல் ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாபிரிக்காவில் பணி புரிய பயணம் ஆனார்.

தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மேலோங்கி இருந்தது இது காந்தியை வெகுவாக பாதித்தது தென்னாபிரிக்காவில் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பின்னாளில் அவரை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றியது.

நான் விரும்பும் காந்தி :-

காந்தியடிகள் பற்றி நிறைய தகவல்கள் பலரும் சொல்வதுண்டு. பள்ளிகளில் வீட்டிலும் கூட அம்மா சொல்லிய கதை நினைவில் உள்ளது. காந்தி ஒருமுறை அரிச்சந்திர புராணம் நாடகம் பார்க்க சென்றிருந்தாராம். அந்த நாடக கலையின் மூலம் ஈர்க்கப்பட்ட காந்தி தானும் ஒருநாளும் பொய்யே உரைக்க மாட்டேன் என்று வாழ்ந்து காட்டினாராம்.  தன் நாட்டு மக்கள் உணவு உடையின்றி துன்பப்படும் போது தனக்கு மட்டும் மேலாடை எதற்கென மேலாடையை துறந்தவர் காந்தி.  தனக்காக வாழ்தலை விட பிறக்காத வாழ்தலே இன்பமென கருதியவர்.

அறத்தின் வழியில் வன்முறைக்கு மாற்றாக அகிம்சையை ஆயுதமாக ஏந்திய மகாத்மா காந்தியின் கொள்கைகள் தனித்தன்மை வாய்ந்தவை. தன்னுடைய வாழ்நாளில் அவர் கடைப்பிடித்த தார்மீக பண்புநலன்கள், அவருடைய அரசியல் செயல்பாடுகளின் மீதும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவை இரண்டையும் நம்மால் பிரித்துப் பார்க்க இயலாததே அவரை பிற சமூகத் தலைவர்களிடமிருந்து மாறுபடுத்துகிறது.

ஆகவே, காந்தியின் கொள்கைகளை ஆராயும்போது, அவற்றுக்குப் பின்னால் அடிப்படையாக இருந்தது சமத்துவமும் மனிதநேயமும்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இவ்விரு முக்கியமான விழுமியங்களும் அவருடைய தனி மனித நடத்தையிலும் அரசியல் நகர்வுகளிலும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன.

அதோடு, சமத்துவமும் மனிதநேயமும் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாக இருந்ததால், அவர் இன்றுவரை அனைத்துலக அளவில் மாபெரும் தலைவர்களால் போற்றப்பட்டு வருகிறார்.

இந்தியச் சுதந்திரத்துக்கான காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பல கட்டங்களைக் கொண்டது. உப்புக்கு அநியாய வரி விதிக்கப்பட்டபோது, உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நடத்தினார். அப்படி காந்தி நடத்திய போராட்டங்களில் முக்கியமான ஒன்று ‘அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம்.’ ‘இங்கிலாந்தின் மான்செஸ்டரிலும், லங்காஷயரிலும் தயாராகி இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ஆங்கிலேயர்களின் ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும். சுதேசி ஆடைகளைத்தான் நம் மக்கள் அணிய வேண்டும். அதற்கு நம் கைராட்டையில் ஆரம்பித்து, ஆடை தயாரிப்பை உள்நாட்டிலேயே ஒரு குடிசைத் தொழிலாகச் செய்யலாம். ஒரு கைராட்டையை வைத்து நூல் நூற்பதுகூட ஏழை மக்களுக்குக் கை கொடுக்கும். ஒருவேளை உணவுக்கு உதவும். அது இந்தியாவின் வறுமையைப் போக்கும். இந்திய மக்களை ஓரணியில் திரளச் செய்யும்…’ இப்படியெல்லாம் யோசித்ததால்தான் காந்தி கைராட்டை சங்கத்தை முன்னெடுத்தார். “கைராட்டை என்பது எளிமை மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது அமைதியின் அடையாளம்’’ என்றும் குறிப்பிட்டார்.

காந்தியின் தத்துவங்கள் :-

* நோயால் மரணமடைபவர்களை விட..

அச்சத்தால் மரணம் அடைபவர்களின்

எண்ணிக்கை அதிகம்..

எனவே யாரும் அச்சம்

கொள்ள வேண்டாம்.

* வலிமை உடலினில் இன்றி வருவதில்லை

அசைக்க முடியாத மனஉறுதிகளில்

இருந்து வருகிறது.. நமது மனதின்

தூய்மை அதிகமாக இருந்தால்..

நமது வலிமையையும்

அதிகமாக இருக்கும்.

* சீருடன் கச்சிதமாகவும்

கண்ணியமாகவும் இருப்பதற்கு

பணம் அதிகம் தேவைப்படாது.

* ஒருவனிடம் துக்கமும் தூக்கமும்

எப்போது குறையுதோ..

அப்போது அவன் மேதையாகிறான்.!

* கடமையை முன்னிட்டு செய்த

செயலுக்கு வெகுமதியை

எதிர்பார்க்க கூடாது.

* செல்லும் பாதை சரியாக இருந்தால்

அதன் முடிவும் சரியாக இருக்கும்.

அதனால் எடுத்து வைக்கும்

ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக

இருக்க வேண்டும்.

* பல தத்துவங்களையும் பொன்மொழிகளையும் காந்தி வளரும் இளம் தலைமுறைக்காக முன்மொழிந்துள்ளார்.

முடிவுரை:-

வாழ்நாள் முழுவதும் அகிம்சையை போதித்த காந்தியின் உயிர் ஒரு துப்பாக்கி குண்டால் பறிபோனது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் தில்லியில் வைத்து நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார்.துப்பாக்கிகளும், வாளும், வேலும் சாதிக்க முடியாததை தன் அற வழி போராட்டங்களால் சாதித்து காட்டினார். மன உறுதிக்கும் போராட்ட குணத்திற்கும் இன்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவது காந்திஜி பற்றித்தான்.

இரா. அரவிந்த் ராஜ்

ஏழாம் வகுப்பு

பெற்றோர் – அனுபிரியா ராஜகுரு

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -