நான்காம் பரிமாணம் – 91

19. மாற்ற அதிகாரம் - 1ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளையும் உங்களுக்கு அதிகாரங்களாக தொகுத்து வழங்கி கொண்டு வருகிறேன். இந்த பகுதியில் உங்களை சுற்றி நடக்கும் பல்வேறு மாற்றங்களைப் பற்றியும் பேச போகிறேன். தொடங்கலாமா?

என்றும் மாறாதது

“மாற்றம் ஒன்றுதான் என்றுமே மாறாதது” எனும் தத்துவம் உங்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்கும். உங்கள் வாழ்வில் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டு மிகப் பெரும் மாற்றங்களுக்கு இடையே இருக்கும் காலகட்டத்தில் நீங்கள் அன்றாடம் பார்க்கும் எந்த ஒரு நிகழும் மாற்றங்களை உள்ளடக்கித்தான் இருக்கும். இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றலாம். மாற்றம் என்ற ஒன்று எதற்காக தோன்ற வேண்டும்? இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் ஜடமாக எந்த ஒரு மாற்றமும் நிகழாமல் இருந்தா யாருக்கும் எந்த லாபமோ நஷ்டமோ வரப்போவதில்லை. ஆனால் மாற்றங்கள் நிகழ்வதால் ஓர் இடத்தில் இருக்கும் பொருள் மற்றொரு இடத்திற்கு தொடர்ந்து மாற்றம் அடைந்துகொண்டே ஓரிடத்தில் லாபத்தையும் மற்றோரிடத்தில் நஷ்டத்தையும் கொடுப்பது போல் இருக்கிறதே?  இந்த எண்ணம் உண்மையானது தானா? அல்லது மாற்றம் என்பது ஒரு போலி தோற்றமா? இதற்கான பதிலை தான் இந்த அதிகாரத்தில் தெரிந்து கொள்ள போகிறோம்.

மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கு முதலில் உங்களைச் சுற்றி நடக்கும் ஒரு சாதாரணமான நிகழ்விலிருந்து தொடங்கலாம். ஒரு நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருக்கும் தண்ணீருக்கு மேலிருந்து கீழே விழுவதற்கு எந்த ஒரு தனிப்பட்ட விசையை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. புவியீர்ப்பு விசை என்பது பூமியில் இயற்கையாகக் கிடைப்பதால் தண்ணீர் தனக்கு முடிந்த அளவு தாழ்மையான பகுதிக்கு வந்து அங்கேயே தங்கி விடும். ஒரு தீக்குச்சியை எடுத்து அதன் அட்டையில் உரசினால் உடனடியாக எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் அந்த சாம்பலை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டுவரவே முடியாது. இது போன்ற அன்றாட நிகழ்வுகளில் நடக்கும் ஒருவித ஒற்றுமையை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு பொருளும் மாறவே முடியாத ஒரு உறுதியான நிலையை அடைவதற்கு தான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வருகின்றன. ஆனால் அப்படிப்பட்ட நிலையை கண்டுபிடிப்பதற்கு தொடர்ச்சியான தன்னை மாற்றிக்கொண்டு பல்வேறு சோதனைகளை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சோதனையை தான் நீங்கள் மாற்றம் என்று கூறுகிறீர்கள்.

நீங்கள் வாழும் அண்டம் உருவாகி பல கோடி ஆண்டுகள் ஆகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் தன்னை மாற முடியாத நிலைமைக்கு மாற்றிக் கொள்ள முயன்றால் இத்தனை கோடி ஆண்டுகளில் அனைத்தும் மாறாத ஒரு ஜடப் பொருளாக மாறி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவர் ஆகாமல் தன்னை மறுசுழற்சி செய்து கொண்டு வெவ்வேறு விதங்களில் செயல்பட்டு வருவதால் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு வருகிறது.  அப்படியானால் இங்கே சுழற்சிக்கும் மாற்றத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்றுதான் அர்த்தம். நான் மேலே கூறிய அதே எடுத்துக்காட்டை இங்கு மீண்டும் பார்ப்போம். நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே செல்லும் நீர் தானாக மேலே செல்ல முடியாது. ஆனால் கீழே விழுந்து நீராக நதியாக ஓடி கடலில் கலந்து பின்பு திரும்பவும் சூரிய சக்தியால் மேகங்களாக மாறி மழை பெய்து நீர்வீழ்ச்சியாக விழ தொடங்குகிறது. அதுபோலவே எரிந்து சாம்பலான தீக்குச்சி மண்ணில் உரமாக மாறும் பொழுது மீண்டும் ஒரு செடியை உருவாக்க உதவி செய்து அதிலிருந்து மரக் குச்சியாக உருவெடுக்கிறது. 

ஆக மொத்தத்தில் சுழற்சி எனும் ஒரு ஒரு பெரிய சக்கரத்தின் சிறிய பகுதிதான் மாற்றம். அங்கே முன்னால் எடுத்து வைத்த அடி பின்னால் மாற்றுவது என்பது முடியாத காரியம். ஆனால் அங்கு சக்கரத்தின் மொத்த படிகளையும் சுழன்று வந்தால் உங்களால் எந்த ஒரு நிலையையும் மீண்டும் மீண்டும் அடைய முடியும். இந்த ஒரு என்னவெல்லாம் அடங்கியிருக்கிறது தெரியுமா? சுருக்கமாக இந்த ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் தான் மொத்த அண்டசராசரம் இயங்குகிறது. இதனை இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் இருந்து கூற ஆரம்பிக்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -