நான்காம் பரிமாணம் – 9

2. ஊழி அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும்  நான் ஊழி அதிகாரத்தில் என்னைப்பற்றிய பல விஷயங்களை உங்களுடன்  பகிர்ந்துகொண்டு வருகிறேன். இருபொருள்களின் சேர்க்கை மற்றும் சுழற்சி மூலமாக உருவாகும் காலக்கணக்கைப் பற்றியும் அதனால் உங்களுக்கு உண்டாகும் பல்வேறு பயன்களை பற்றியும் ஏற்கனவே கூறிவிட்டேன். இந்த பகுதியில் உங்கள் உடம்பின் காலக்கணக்கைப் பற்றி  சில தகவல்களை கூறப் போகிறேன்.


உடலின் காலக்கணக்கு 
உங்கள் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் இறவாத வாழ்க்கை வேண்டும் என்ற ஓர் எண்ணம் எப்பொழுதுமே உண்டு. எந்த ஓர் உயிரினமும் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான். உடலில் எவ்வளவு செல்கள் இறந்து போகிறதோ அதே அளவுக்கு புதிய செல்களை உருவாக்கிக்கொள்ளும் திறமை. ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டால் பிறந்த சில காலங்களுக்கு தொடர்ந்து வளர்ச்சியடைந்துகொண்டே வருவதை உங்களால் பார்க்க முடியும். ஆனால் முதிர்ச்சி அடைந்த உடன் வளர்ச்சி நின்று விடும். முதுமை காலத்தில் உடல் வலிமை மற்றும் எடை ஆகியவை  குறைய ஆரம்பித்து விடும்.  இதற்கு காரணம் , குழந்தை பருவத்தில் உயிரிழக்கும் செல்லகளை விட புதிய செல்கள் அதிகமாக இருக்கும். முதிர்ச்சி அடைந்தவுடன் சமமாக இருக்கும். அதிக வயதானவுடன் புதிய செல்களை விட உயிரிழக்கும் செல்களின் எண்ணிக்கை மிக  அதிகமாகிவிடும்.


காலத்தைப் பற்றி பேச ஆரம்பித்து உடலை பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? நான் மேற்கூறிய தகவலை தெரிந்துகொண்டால் தான் இப்பொழுது கூறப்போகும் காலக்கணக்கு உங்களுக்கு புரியும். மண்துகளில் இருக்கும் சீரான அதிர்வு  மூலமாக நொடிகளை அளந்த நீங்கள், உங்களுடைய காலத்தை அளந்து கொள்வதற்க்காக உள்ள மூலக்கூறுதான் டி.என்.ஏ  (DNA – DeoxyriboNucleic Acid). டி .என் .ஏ வின் மூல மாதிரியில் இருந்து எடுக்கப்பட்ட அச்சு பிரதிகள்தான் உங்கள் உடம்பில் உள்ள அனைத்து செல்களும். மண்துகளின் மீது electron மோதுவதைப் போல டி.என்.ஏ வோடு உடலின் இயக்க சக்தி இணைவதினால், சரியான கால அளவு இடைவெளியுடன் உங்கள் உடம்பில் தொடந்து புதிய செல்கள் பிறந்துகொண்டே இருக்கும். உங்கள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் இவ்வாறுதான் உருவாகிறது. ஒவ்வொரு நொடியும் நடக்கும் இந்தச் செயலால் நீங்கள் தொடந்து பிறந்துகொண்டேதான் இருக்கிறீர்கள் என்று கூட சொல்லலாம்.  இப்படி பிறக்கும் புதிய செல்கள் சீரான இடைவெளியில் இருப்பதால்தான் உங்கள் உடல் பார்ப்பதற்கு தினமும் மாற்றம் அடையாதது போல் உள்ளது. 


சரி. சீரான இடைவெளியில் புதிய செல்கள் பிறந்துகொண்டே இருந்தால் உங்களுக்கு முதுமை என்பது வரவே கூடாது அல்லவா? அப்படியும் நடப்பதில்லை. அதன் காரணமும் டி.என்.ஏ வுக்குள் தான் ஒளிந்துள்ளது. ஒரு மண்துகள் மீது  மின்சாரம் செலுத்தினால் மாறாமல் ஒரே அதிர்வை கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆனால் டி.என்.ஏ வோ எவ்வளவு முறை சக்தியை செலுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவுதான் செல்களை உருவாக்கும். இந்த எண்ணிக்கை தான் உயிர்களின் ஆயுட்காலம். உதாரணமாக, உங்கள் கல்லீரல் பகுதியை உருவாக்கும் டி.என்.ஏ வானது சில லட்சம் முறை கல்லீரல் செல்களை உருவாக்கம் செய்யும்படி டி.என்.ஏ வில் பதிவு செய்து வைத்துள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த எண்ணிக்கை முடிந்து விட்டதென்றால் புதிய  கல்லீரல் செல்கள் உருவாகாமல் நாளடைவில் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலில் உள்ள அநேக பாகங்களில் இதுபோல மொத்தமாக நடப்பதற்கு பெயர் தான் முதுமை. 


உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கும் பிறக்கும்பொழுதே டி.என்.ஏ வுக்குள் காலக்கணக்கு எழுதப்பட்டு விடும். இதற்க்கு பெயர் தான் தலைவிதி. பொதுவாக உடல் உறுப்புகள் சரியாக பயன்படுத்தப்பட்டால் அனைத்து உறுப்புகளும் ஒரே காலஅளவில் வயோதிகம் அடைத்துக்கொண்டு வரும். அப்படி இல்லாமல் ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் அதிகமாக பாதிக்கும் தவறான பழக்கங்களை மேற்கொண்டால் அந்த பகுதியில் மட்டும் பல மடங்கு வேகமாக புதிய செல்களை உருவாக்கி, டி.என்.ஏ துணைகொண்டு உங்கள் உடலை சரி செய்ய உழைக்கும் . வேகமாக செல்களை உருவாக்க உதவும் டி.என்.ஏ வால், அது உருவாக்க முடிந்த செல்களின் மொத்த எண்ணிக்கையை மட்டும் மாற்றவே முடியாது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு 100 ருபாய் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு ருபாய் செலவழித்தால், 100 நாட்கள் உங்களால் செலவு செய்ய முடியும். ஆனால் தினமும் 2 ருபாய் செலவழித்தால், 50 நாட்களில் மொத்தமும் தீர்ந்துவிடுமல்லவா? டி.என்.ஏ வுக்கும்  இதே நிலைமை தான். பிறக்கும் பொழுது கிடைக்கும் ஒரே ஒரு எண்ணிக்கையை  கொண்டு தான் வாழ்நாள் முழுவதும் அது ஓட்ட வேண்டும்.


ஒருவர் தனது வாழ்நாளில், தவறான பழக்கத்தால் உடலின் ஒரு பகுதியை மட்டும் கெடுத்துக்கொண்டால், அப்பகுதி முதுமை அடைந்து புதிய செல்களை உருவாக்காது.  ஆனால் மற்ற பகுதிகள் அனைத்தும் நன்றாக இருப்பதால், முதுமை அடைந்த பகுதி, தன்னால் உருவாக்க முடிந்த வேறு பல செல்களைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கும். இடத்தை நிரப்ப மட்டுமே உருவாக்கப்பட்ட புதிய செல்களால் அந்த உறுப்பின் செயல்களைச் செய்ய முடியாது. இந்த நிலைக்கு நீங்கள் வைத்த பெயர் தான் புற்றுநோய்.  (Cancer). நீங்கள் உங்கள் வயதை வருடம், மாதம் மற்றும் நாட்களால் அளக்கிறீர்கள் அல்லவா? அது சரியான முறை கிடையாது. அதற்கு பதிலாக உங்கள் டி.என்.ஏ வின் செல் உருவாக்க சக்தியை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்துகிறீர்கள் என்பது தான் உண்மையான வயது. இதனை உடல் வயது (Body  age) என்று உங்கள் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வீட்டிலிருந்தே எளிமையாக உடல் வயதை கண்டுபிடிக்கும் கருவிகளும் சமீப காலமாக உங்களுக்கு கிடைக்கின்றது. உங்கள் கால வயதும் (Chronological age) உடல் வயதும் (Body age) ஒன்றாகவோ உடல் வயது குறைவாகவோ இருந்தால் நீங்கள் உடலை நன்கு பராமரிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். 


உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரே கால அளவு இருக்கும் ஏன்று சொல்ல முடியாது. ஒன்றாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு (non-identical twins) கூட தலையெழுத்தில் உள்ள காலக்கணக்கு வேறுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் ஒருவருடைய பழக்க வழக்கம் மற்றும் காலக்கணக்கை என்றுமே மற்றொருவருடன் ஒப்பீடு செய்வது சரியாக வராது.


மனதின் காலம் 
உங்கள் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் காலத்தைப்  பற்றியும் உங்கள் உடலின் காலத்தை பற்றியும் கூறிவிட்டேன். அது இரண்டும் எவ்வளவு வித்தியாசம் என்றும் பார்த்தாகி விட்டது. பொருள் , உடல் இவை இரண்டையும் தாண்டிய மனம் முற்றிலும் வேறுபட்ட விஷயம். மனம் காலத்தை அளப்பது மிகவும் விசித்திரமான ஒன்று. அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

2 COMMENTS

  1. ஒவ்வொரு உறுப்பின் செல்லும் ஒரு குறிப்பிட்ட முறை மட்டுமே தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொள்ளும் என்றால். அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் செல்களை இழப்பார்களே? அவர்கள் விரையாக இறந்துவிடுவார்களா?

    • அருமையான கேள்வி ஜெயக்குமார். இதன் சுருக்கமான பதில் “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”. உடற்பயிற்சி செய்யும் பொழுது செல்கள் அழிவது உண்மை தான். எது சரியான அளவு எது தவறான அளவு என்பதில் தான் சூட்சமம் ஒளிந்துள்ளது. இந்ததொடரின் அடுத்த அதிகாரத்திலேயே உங்களுக்கான பதில் விரிவாக வெளிவரப்போகிறது! தொடர்ந்து படித்து வாருங்கள்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -