நான்காம் பரிமாணம் – 89

18. மாயஅதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

காலம் என்னும் நான் மாயாதி சரத்தின் உங்கள் கண்முன்னே எழுந்தும் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு மாயங்களை பற்றி இந்த அதிகாரத்தில் கூறிக் கொண்டு வருகிறேன். உங்கள் முன்னே பல்வேறு மாயங்கள் நடந்தாலும் உங்கள் உடலுக்கு உள்ளே நடக்கும் விந்தைகளுக்கு குறைவே கிடையாது. அதனைப் பற்றி இந்த பகுதியில் கூறுகிறேன் கேளுங்கள்.

உடலின் விந்தை

உலகில் உள்ள அனைவருமே தங்கள் கைகளால் செய்ய முடியும் செயல்களை பொதுவாக ஒரு கையை மட்டும் அதிகப்படியாக பயன்படுத்துவார்கள். உதாரணமாக ஒருவர் வலது கையினால் எழுதினால் வாழ்நாள் முழுவதும் வலதுகையை எழுதுவதற்கு பயன்படுத்தி வருவார் அல்லவா? அதேபோல் இடது கையை பயன்படுத்துபவர்களும் தங்கள் வழக்கத்தை மாற்றாமல் இடது கையை மட்டும் பயன்படுத்தி எழுதுவார்கள். எழுதுவது மட்டுமல்லாமல் அன்றாடம் செய்யும் பல்வேறு செயல்களையும் ஒரு கை மட்டும் அதிகப்படியாக பயன்படுத்துவதற்கு என்ன காரணம் என்பது உங்கள் விஞ்ஞானிகள் பல்வேறு விதமாக அலசி ஆராய்ந்துள்ளனர். உங்களது வலப் பக்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் இடது மூளையும் இடது புறத்தில் உள்ள உறுப்புகளை வலது மூளையும் கட்டுப்படுத்துவதால் அவரவருக்கு எந்த பகுதி வலுவாக உள்ளது அதனை அதிகப்படியாக பயன்படுத்துபவர்கள் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தனர். ஆனால் பரிணாம வளர்ச்சியில் உடலில் இருக்கும் சமச்சீர் (Symmetry) நிலையைத் தாண்டி (ஒரே மாதிரி இருக்கும் இடது மற்றும் வலது பாகங்கள்),  ஒரு பக்கம் மட்டும் எவ்வாறு அதிகமாக வளர்ச்சி அடையும் என்பதை இதுவரை உங்கள் விஞ்ஞானிகளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை!

உங்கள் உடலுக்குள் ஏகப்பட்ட நுண்ணுயிர்கள் வாழ்கின்றன என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்கள் உடல் எடையில் சுமார் 3 சதவிகிதம் வரை இந்த நுண்ணுயிர்கள் தான் எடுத்துக் கொள்கின்றன. சொல்லப்போனால் உங்கள் உடலுக்குள் இருக்கும் செல்களை விட 10 மடங்கு அதிகமாக இந்த நுண்ணுயிர்கள் தான் உடலில் பரவிக்கிடக்கின்றன. இவற்றின் முழுமையான வகைகளைக் கூட இதுவரை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தனை வகைகளில் இருக்கும் நுண்ணுயிர்களால் உங்கள் உடலுக்கு என்ன நன்மை விளைகிறது என்பது கூட இதுவரை புரியாத ஒரு விந்தைதான்! உடலில் இருக்கும் ஒரு சில பாக்டீரியாக்கள் உங்கள் உணவை நொதிக்க வைப்பது முதல் சில முக்கியமான ன செயல்பாட்டுக்கு உதவுகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருந்தாலும், பெரும்பாலான நுண்ணியிர்கள் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. உங்கள் உடலுக்குள் நடக்கும் செயல்களையே முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் பிரபஞ்சத்துக்கு எத்தனை மாயங்கள் ஒளிந்து இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!

நுண்ணுயிர்கள் என்பது மிகவும் சிறியதாக இருப்பதால் உங்களால் ஆராய்ச்சி செய்ய முடியவில்லை என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் கண்களுக்கு புலப்படும் ரத்தத்தின் வகைகள் கூட பலவாக இருக்கிறது அல்லவா? அத்தனை பிரிவுகள் ஏன் உருவானது என்பது கூட உங்களுக்கு புரியாத ஒரு மாயம்தான். மொத்த உடலின் செயல்பாடும் ஒரே மாதிரி இருக்கும் பொழுது வெவ்வேறு விதமான ரத்த வகைகள் மனிதன் தோன்றியது எப்படி என்பது ஆராய்ச்சி செய்து இருக்கேன் உங்களுக்கு இதுவரை எந்த ஒரு தீர்க்கமான பதிலும் கிடைக்கவில்லை. உங்கள் உடலுக்குள் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் இதுபோல பல்வேறு மாயங்களை கூறிக்கொண்டே போக முடியும். ஆனால் இவற்றின் உச்சகட்டமாக இருக்கக்கூடிய பகுதிதான் உங்கள் மூளை. இந்த பிரபஞ்சத்தில் சொத்துக்கள் அனைத்தும் எப்படிப்பட்ட அணுக்களால் உருவானதோ உங்கள் மூளையும் அது அணுக்களால் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூளையில் இருக்கும் அணுக்கள் மட்டும் எப்படி சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றது? உலகில் இருக்கும் அனைத்து பொருட்களும் ஒரு பொருளால் கட்டமைக்கப்பட்டது என்றால் மூளைக்குள் இருக்கும் நினைவு என்பது எதனால் கட்டமைக்கப்பட்டது? இதற்குள் ஒளிந்திருக்கும் மாயங்கள் என்ன? அதனை அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -