நான்காம் பரிமாணம் – 88

18. மாயஅதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

நான்தான் காலம் பேசுகிறேன். மாய அதிகாரத்தில் உங்கள் அறிவுக்கு புலப்படாத அனைத்தையும் நீங்கள் எவ்வாறு மாயம் என்று அழைக்கிறீர்கள் என்றும் இன்னும் உங்களுக்கு புரியாது ஏகப்பட்ட புதிர்கள் உலகில் இருப்பதை பற்றியும் சென்ற பகுதிகளில் கூறியுள்ளேன். செடிகளில் இருக்கும் பல்வேறு மாயங்களை சென்ற பகுதியில் பார்த்த நாம் இந்த பகுதியில் விலங்குகளை பற்றி பார்ப்போம்.

பரிணாமமும் இறவாமையும்

ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ந்து சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட மனிதனாக மாற உங்களுக்கு பல கோடி வருட பரிணாம வளர்ச்சி தேவைப்பட்டது. ஆனால், இந்த பரிணாம வளர்ச்சியில் கூட உங்களால் சாதிக்க முடியாத விஷயங்கள் மிகவும் அதிகமாக உள்ளது. அதில் முக்கியமான அம்சம் தான் இறவாமை. ஏதோ ஒரு உயிரினத்தின் முக்கியமான நோக்கமே தன்னுடைய பண்புகளை தொடர்ச்சியாக வாழ வைத்துக் கொண்டிருப்பதுதான். அப்படி ஒருவேளை வாழ முடியவில்லை என்றால் தங்களைப் போலவே மற்றொரு உயிரினத்தை உருவாக்கிவிட்டது பெற்றோர்கள் இறந்துவிடும். இந்த சுழற்சியிலிருந்து வழிபடுவதற்காக பரிணாம வளர்ச்சி என்பது தன்னை மிகவும் மாற்றிக்கொள்ள முனைந்துள்ளது. அவற்றில் பல்வேறு விதமான மாற்றங்கள் உங்களுக்கு இதுவரையில் மாயமாக தான் இருந்து வருகிறது.

இரவாமல் இருப்பதற்கு முதலில் முக்கியமாக தன்னை மற்ற உயிரினங்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமல்லவா? இதற்கு ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமான உத்தியை பின்பற்றிக் கொண்டு வந்தது. பல்வேறு செடிகளிலும் உயிரினங்களிலும் விஷப் பற்கள் இருப்பதற்கு காரணம் இதுதான். சிங்கம் போன்ற பல்வேறு உயிரினங்களுக்கு விஷம் இல்லாவிட்டாலும் தன்னுடைய அசுர பலத்தால் எதிரியை ஒரேடியாக அழித்துவிட்டு தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும். இன்னும் சில உயிரினங்கள் பலமும் இல்லாமல் விஷமும் இல்லாமல் இருக்கும் பொழுது மற்ற உயிரினங்களிடமிருந்து மறைந்து வாழ்வதற்கு கு தேவையான அனைத்து வசதிகளையும் தன் உடலிலேயே கொண்டிருக்கும். உதாரணத்திற்கு பச்சோந்தி தன்னுடைய நிறத்தை இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டு எதிரியின் கண்ணில் படாமல் இருக்கும். வரிக்குதிரைகளுக்கு உடலில் விஷம் அல்லது சிங்கங்கள் போன்ற உயிரினங்களை தாக்குவதற்கு தேவையான பலமோ கிடையாது. இந்த விதத்தில் வரிக்குதிரையின் உடலில் இருக்கும் வரிகள் அதனை தற்காத்துக் கொள்வதற்காகத்தான் இருக்க வேண்டுமென்று நீங்கள் பல காலமாக நம்பிக் கொண்டு வந்தீர்கள். ஆனால் அதன் உடலிலிருக்கும் வரிகளை எளிதாக கண்டு கொண்டு மற்ற பலசாலியான மிருகங்கள் அதனை உணவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வளவு இருந்தும் பரிணாம வளர்ச்சியில் அதனுடைய வரிகள் இருக்கும் காரணத்தைப் புரிந்து கொள்வதற்கு உங்கள் விஞ்ஞானிகள் மிகவும் முயற்சித்தனர். அதனிடம் இருக்கும் வரிகளால் வேறு சில பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது போன்ற சில புதிய யோசனைகளை தவிர உறுதியான ஒரு முடிவு இதுவரை எட்டப்படவில்லை.

நான் மேலே கூறியவாறு மற்ற மிருகங்களிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தியின் மூலமாக உயிரை வளர்த்துக் கொள்வது ஒருவகை. சாகாமல் இருப்பதற்காக தன்னுடைய உடலுக்கு உள்ளேயே புதிய செல்களை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டே இருப்பது மற்றொரு வகை. ஒரு உயிரினத்தால் அவ்வாறு செய்து கொள்ள முடியும் என்றால் அதற்கு இறப்பு என்ற ஒன்றே கிடையாது. சிலவகை மரங்கள் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து வாழ்வதை உங்களால் பார்த்திருக்க முடியும். ஆனால் எந்த ஒரு உயிரினமும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வது சாத்தியம் கிடையாது. அதற்கு காரணம் மரங்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டு தனக்கு வேண்டிய உணவை உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் மிருகங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு ரு இடத்திற்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதால் அதன் சூழ்நிலை ஒரே போல் இருப்பதில்லை. ஆனால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் கூட மிக அதிக காலம் வாழும் ஒரு வித நத்தையை நீங்கள் கண்டுபிடித்தீர்கள். நீங்கள் கண்டுபிடிக்கும் பொழுது அதற்கு வயது சுமார் 500ஐ கடந்திருந்தது. ஆனால் அதன் வயதை கண்டறிவதற்காக நீங்களே அதனை கொன்று விட்டீர்கள். ஆனால் அதன் பின்பு அதன் உடலை ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது டெலோமேரிஸ் (Telomerase) எனப்படும் ஒருவித சுரப்பி அதன் வயதை வளர்ப்பதில் உதவி செய்வதை கண்டுபிடித்தீர்கள். இந்த சுரப்பியின் உதவியா உங்கள் உடலில் இறந்த செல்களை உடனடியாக தொடர்ந்து புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும். இதனை மட்டும் ஒரு உயிரினம் செய்துவிட்டால் இறவாமல் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் எவ்வாறு இந்த சுரப்பியை பயன்படுத்த முடியும் என்பதை இதுவரை நீங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டேதான் வருகிறது சிறிய வெற்றி அடையவில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் விலங்குகளில் இறவாமை என்பது இதுவரை உங்களுக்கு ஒரு புரியாத மாயம் தான்.

விலங்குகளுக்குள் மிகவும் அதிகப்படியான மூளை வளர்ச்சி அடைந்த மனிதன் மற்ற விலங்குகளால் புரிந்து கொள்ள முடியாத பல்வேறு விந்தைகளை புரிந்து கொண்டுள்ளான். ஆனாலும் கூட அவன் உடலுக்குள்ளேயே இருக்கும் பல்வேறு விஷயங்கள் கூட இதுவரை அவனுக்கு ஒரு மாயமாக தான் இருக்கிறது. அது என்னவென்று அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருக்கிறேன்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -