நான்காம் பரிமாணம் – 84

17. மாசு அதிகாரம் - 4ஆம் பகுதி

- Advertisement -

ந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்


காலமெனும் நான் மாசு அதிகாரத்தில் அதன் தொடக்கம் முதல் அது எவ்வாறு உங்களுக்கு பயன்படுகிறது என்பதை கூறி வந்தேன். இந்தப் பகுதியில் அதனால் ஏற்படும் தீமை பற்றி கூறப்போகிறேன். தெரிந்துகொள்ளலாமா?

வாழ்வின் மறுபக்கம்


உங்கள் வாழ்வின் ஆதாரமாக மாசு எவ்வாறு செயல்படுகிறது என கடந்த சில பகுதிகளாக பல காரணங்களை கூறி வந்தேன் அல்லவா? அதே காரணங்கள் அனைத்தும் உங்கள் வாழ்வை அழிப்பதற்கும் பேருதவியாக இருக்கிறது! ஆம். உதாரணமாக மழை மேகங்கள் உருவாவதற்கும் மழை பொழிந்து பூமிக்குள் இருப்பதற்கும் காரணமாக மாசு எவ்வாறு உதவுகிறது என்று உங்களுக்கு கூறிவிட்டேன். இதையே காரணமாக வைத்துக்கொண்டு நீங்கள் உலகில் உருவாக்கிய தொழிற்சாலைகள் அனைத்தும் புகையைக் கக்கியபடி வானில் உள்ள மேகங்களின் எண்ணிக்கையை அதிகமாகவும் அடர்த்தியாகவும் மாற்றிக் கொண்டே வருகிறது. இதனால் காற்றின் ஈரப்பதத்தை மிக அதிகப்படியாக மேகங்கள் உறிஞ்சிக்கொண்டு தன்னுள் தக்க வைத்துக் கொள்கிறது. குறைவான மேகங்கள் இருக்கும் பொழுது சீரான காலவெளியில் மழை பெய்து கொண்டு வந்தது. பண்டைய காலங்களில் மாதம் மும்மாரி பொழிவதை ஒரு சதவிகித நிலையாக வைத்திருந்தனர். மேகத்தின் அடர்த்தி மிகவும் அதிகமானதால் மழை சரிவிகித நிலையில் பொழியாமல் அதிகமான நீரை தன்னுள் சேமித்து கொண்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் நிலப்பரப்பில் மழை பொழியாமல் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலைமை வரக்கூடும். அளவுக்கதிகமான நீரை சுமந்து வரும் மேகம் ஒருகட்டத்தில் மொத்தமாக அடை மழையாக மாறி மிகப் பெரும் பள்ளத்தை சில நிமிடங்களில் உருவாக்கும். இதனைத்தான் நீங்கள் மேலே வெடிப்பு என்று கூறுகிறீர்கள். நீங்கள் காற்றை மாசுபடுவதால் ஏற்படும் விளைவு தான் இது. 


காற்று மாசுபாட்டில் உள்ள தூசியின் அளவு ஏற்படுத்தும் விளைவுகள் கூட மிகவும் அபாயகரமானவை. தூசியின் அளவு 10 மைக்ரானுக்கும் அதிகமாக இருந்தால் அந்த தூசி மிகவும் விரைவாகவே புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பூமியில் படிந்து விடும். ஆனால் இரண்டரை மைக்ரானுக்கு குறைவாக இருக்கும் தூசிகள் அவ்வளவு எளிதாக புவியீர்ப்பு விசைக்கு கட்டுப்படுவதில்லை. அதனால் இது காற்றில் மிகவும் அதிக காலம் தாக்குப் பிடித்து உங்கள் மூக்கு வழியாக நுரையீரலில் சென்று படிந்து விடுகிறது. அளவு சற்று பெரிதாக இருந்தால் உங்கள் நுரையீரல் தூசியை எளிதாக இனம் கண்டு பிடித்துக் கொள்ள முடியும். ஆனால் இரண்டரை மைக்ரான் அளவுள்ள தூசிகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் கண்களுக்குப் புலப்படாமல் நுரையீரலை அடைத்துக்கொண்டு மிகவும் ஆபத்தான நோய்களை உருவாக்கக் கூடியது. பல்வேறு வளர்ந்துவரும் நாடுகள் நோய்வாய்ப் பெறுவதற்கு முக்கிய காரணம் இருதய கோளாறு என்று நீங்கள் நினைத்து இருந்தால் அது மிகவும் தவறு. உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் முதல் இடம் பிடிப்பது நுரையீரல் தான். 

நீங்கள் காற்றை மட்டுமல்லாமல் அத்துடன் சேர்த்து நிலம், நீர் ஆகியவற்றையும் சேர்த்தே மாசு படுத்துகிறீர்கள் அல்லவா? உங்களுக்கு வரும் நோய்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை நீங்கள் உருவாக்கிய மாசுபாட்டினால் மட்டுமே ஏற்படுகிறது! முக்கியமாக நீர்நிலைகளில் நீங்கள் ஏற்படுத்தும் மாசுபாட்டினால் அதிகமான நுண்ணுயிர்கள் உருவாகி நிலத்தடி நீர் மற்றும் நதிநீர் போன்ற குடிநீர் வழங்கும் ஆதாரங்களையும் முற்றாக அழிக்கிறது. உலக சரித்திரத்தை முற்றிலும் மாற்றியமைத்த பெருந்தொற்றுக்கள் அதிகப்படியாக மாசுபாட்டினால் ஏற்படும் நுண்ணுயிர்களால் உருவாவதுதான். சுருக்கமாக சொல்லப்போனால் மாசுபாட்டினால் சரியான அளவில் பயன்படுத்திக் கொண்டு வந்தால்தான் அது உங்களுக்கு நன்மை விளைவிக்கும். பொருட்களில் ஏற்படும் மாசுபாட்டினால் நான் கூறிய அனைத்து விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆனால் இதனை விட மிகவும் கொடிய மாசுபாடு ஏற்படும் இடம் எது தெரியுமா? அதுதான் உங்கள் மனம். இதனைப் பற்றி இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் கூறுகிறேன். அதுவரை காத்திருங்கள். 

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -