நான்காம் பரிமாணம் – 82

17. மாசு அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -


காலம் என்னும் நான் மாசு அதிகாரத்தில் உங்கள் வாழ்வில் மாசு எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை கூற தொடங்கியுள்ளேன். காற்றிலுள்ள தூசியினால் ஏற்படும் ஒளிச்சிதறல் மட்டும் நிகழவில்லை என்றால் உங் அந்த நிகழ்வின் பொழுது ஏற்படும் உராய்வினால் அந்த குப்பை பந்துகளால் உயிர் வாழவே முடியாது எப்படி என்பதை சென்ற பகுதியில் கூறியிருந்தேன். உயிர் வாழ்வது மட்டுமல்லாமல் அனைத்தும் உருவானதற்கு காரணமும் தூசிதான் என்பதை இந்த பகுதியில் கூறப்போகிறேன். தொடங்கலாமா?


தூசியும் ஈர்ப்பு விசையும்


உங்கள் வீட்டை அடுத்த முறை சுத்தப்படுத்தும் போது ஒரு விஷயத்தை கூர்ந்து நோக்கிப் பாருங்கள். நீங்கள் தொடர்ச்சியாக தினமும் உங்கள் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தால் அங்கு ஏற்படும் தூசி ஆனது மிகவும் சன்னமாக இருக்கும். அதே சமயத்தில் சில நாட்கள் தொடர்ச்சியாக சுத்தப்படுத்த வீட்டை உற்று நோக்கிப் பாருங்கள். அங்கு தரையில் விழும் சாதாரண தூசியானது சிறிதுசிறிதாக ஒன்றோடு மற்றொன்று ஒட்டிக்கொண்டு அழுக்கு உருண்டையாக மாற ஆரம்பித்துவிடும். சில நாட்களுக்கே அதன் அளவு பெரிதாகி கொண்டிருக்கும் பொழுது பலகோடி ஆண்டுகள் இந்த செயல் தொடர்ந்து நடந்தால் எவ்வளவு பெரிய அழுக்குருண்டை உருவாகும் என்று யோசித்துப் பாருங்கள். அண்டசராசரம் என் வீட்டில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு நிகழும் நிகழ்வு தான் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களாக உருவெடுக்கின்றன! அப்படியானால் அவை அனைத்துமே உருண்டையான ஒரு பங்காக மட்டும்தானே இருக்க வேண்டும்? அவற்றில் சிலவை எரியும் நெருப்பு கோள்களாக மாறி ஒன்று மற்றொன்றை தொடர்ச்சியாக சுற்றிக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?


இந்த கேள்விக்கும் நீங்கள் உங்களுடைய வீட்டில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். குப்பையில் கொள்ளுங்கள் செய்யப்பட்டிருக்கும் ஒரு சிறிய பந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சுத்தியல் கொண்டு தொடர்ச்சியாக அடித்து அதனை அளவில் சிறிதாக்க முயற்சித்தால் அதனுள்ளே மிகுந்த வெப்பம் ஏற்படும். சில சமயங்களில் அந்தப் பொருள் தீப்பிடித்து எரிய கூட ஆரம்பித்து விடும். சரி சுத்தியலால் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்படுகிறது. சூரியன் போன்ற நட்சத்திரங்கள் தாமாகவே எப்படி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது? பல கோடி ஆண்டுகளாக உருவாகும் எந்த ஒரு நட்சத்திரமும், தன்னுடைய எடையை தாங்க முடியாமல், தன்னுடைய ஈர்ப்பு விசையால் அதன் வெளிப்புறத்தை உள்ளே இழுத்துக்கொள்ளும். இந்த ஈர்ப்பு விசையானது நான் மேற்கூறிய சுத்தியலால் அடிக்கும் விசையை விட கணக்கிட முடியாத அளவு மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால் ஏற்படும் அபரிமிதமான வெப்பமானது அந்த விண்வெளிப் பொருளை மொத்தமாக எரிய வைத்து அதனை ஒரு நட்சத்திரமாக மாற்றுகிறது.

தனக்கு ஏற்படும் ஈர்ப்பு விசையானது நெருப்பை உண்டாக்குகிறது என்று கூறினோம் அல்லவா.. அதுபோலவே இதே ஈர்ப்புவிசை தன்னை சுற்றியுள்ள மற்ற கிரகங்களையும் பிடித்து இழுக்கும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுவதால் ஏற்படுவதுதான் சுழற்சி எனப்படும் நிகழ்வு. பல நாள் பூட்டி வைக்கும் வீட்டில் உள்ள தூசி அனைத்தும் ஒரே உருளையாக மாறிவிடாமல் பல்வேறு சிறிய குழுக்களாக ஆங்காங்கே சிதறிக் கிடப்பது போலத்தான் அண்டத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் உருவாகின. கூட்டம் கூட்டமாக உருவாகிய இந்த தூசியில் ஒன்று மற்றொன்றை பிடித்திழுத்து ஏற்பட்ட நிகழ்வுதான் கிரகங்களின் சுழற்சி ஆக மாறியது. நட்சத்திரத்தின் தூசுகள் பெரும்பாலும் ஒரே மாதிரி தாதுக்களை தன்னுள் பூண்டிருக்கும் இவை அனைத்தும் குழுக்களாக ஒன்று சேர்ந்ததால் ஏற்பட்ட விளைவை இங்கே கூறினேன். ஆனால் இவற்றுள் மேலும் சில மாறுபட்ட தூசுக்கள் ஒன்றாக கலந்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? அதன் மூலமாகத்தான் உங்களைப் போன்ற அனைத்து உயிர்களும் உருவாகின! இதனைப் பற்றி இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் கூறுகிறேன் அதுவரை காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

1 COMMENT

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -