உன்னை விலகுவதில்லை

கவிதை

- Advertisement -

இடுக்கண் களைய
பின்னிய கரங்களின்
விரல் இடுக்குகளில்
வீசுகிறது இன்னும் வெப்பம்
வீசுமந்த வெப்பமண்டலம்
கடந்து வேறொரு புயலா
எனைக் கடக்கும்

இன்பமள்ளி பருகிடச் செய்த
புலனவழி குறுஞ்செய்தி
தொழுநோய் வந்ததை போல் மெல்ல கரைந்து காணாமல் போயிற்றே என்ன செய்தி

தொடுதிரையில் நிறைந்திருந்த இதய முத்தமும்
இன்றென் விழித்திரைக்கு
கிட்டவில்லையே ஏன் மொத்தமும்

இன்பமே.!!இன்பமே!!
கண்ணெதிரே களைந்து
சென்ற கார்முகிலைக் கண்டு
இருந்துவிடாதே இனி
மழையே வராதென்று

மழையை அழைக்க மரமாவேன்
மயிலே நீ ரசிக்க மழையாவேன்
வேண்டாம் என்றால்
குடையாவேன்
குளிர் தடுக்க உடையாவேன்

வேண்டாமென்றாலும் வேண்டும்
வேண்டுமென்றாலும் வேண்டும் -என
நீ உதிர்க்கும் வினோத வினைச்
சொற்களுக்கு விடையாவேன்

அன்பே …!!!இவ்வாறு
ஆதியந்தம் அறிந்த உன்னை
எவ்வாறு நீங்கலாவேன்..

- வரலாற்றுச் சிறுகதைப் போட்டி – 2022 -
தமிழ் வாணன்
தமிழ் வாணன்https://minkirukkal.com/author/tamilvanan/
மகாதேவப்பட்டிணம்,எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தை பின்புலமாக கொண்ட நான். இயந்திரவியலில் இளங்கலை பட்டம் பெற்று .தற்போது கப்பல் சார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருக்கிறேன். Msg: நடிப்பு,கவிதை,கதை எழுதுவதில் ஆர்வமுண்டு. அவ்வப்போது அதற்கான முயற்சியையும் செய்து வருகிறேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -