சகடக் கவிதைகள் – 9

இறந்தவன் பேசுகிறேன்.......

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இறந்தவன் பேசுகிறேன்…

குளிரில்லை….. இங்கு
வெயிலில்லை
நேரம் பார்க்கக் காலமும்
இங்கில்லை

இன்பமில்லை….. துவண்டுபோகத்
துன்பமில்லை… ஏனெனில்
வெற்றி தோல்வியுமில்லை…

வெறுப்பில்லை…. கொண்டாட
நட்பில்லை….. பகைவனின்
புன்னகையில் விஷமுமில்லை…

எது மேல்…? எது கீழ்…?
எது உயரம்…? எது தாழ்வு…?
எது அருகே…? எது தூரம்…?
பொருத்திப் பார்த்துப் பொருளுணர
போதிய தரவுகளுமில்லை….

பொறாமை கொள்ள அளவுகோல் இல்லை…
புறம் பேசக் கேட்கும் காதுகளுமில்லை…

கண்களைத் திறந்து
“ஆஹா… எத்தனை ஆனந்தம்” என்றேன்
இல்லாத இவை அனைத்தும்
நில்லாது எனை நோக்கித்
தள்ளாத குறையாய் வந்தேறியது…..

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -