குழந்தைப் பாடல்கள்

- Advertisement -

மான்
புள்ளி போட்ட மானே
மெல்ல மெல்ல வா வா
வண்ண வண்ண மானே
குதித்து ஓடி வா வா

கொம்பால் முட்டி விளையாடி
மகிழ்ந்திருக்கும் மானே
துள்ளித் துள்ளி வா வா
அழகு மிக்க மானே

அணில்

கோடு போட்ட அணிலே
பழம் உண்ண வா வா
பஞ்சு மேனி அழகுடன்
அங்கும் இங்கும் திரிவதேன்?

பழங்களில் வித்தை காட்டும் நீ
தோட்டத்திற்கு வா வா
தொட்டுத் தொட்டுப் பார்க்கவே
ஆசையாக உள்ளதே.

அனுமிதா
அனுமிதாhttps://minkirukkal.com/author/anasshi/
நான் ஆன்ஷி அனுமிதா அருண்றோஜன். மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 4 ம் ஆண்டில் கல்வி கற்கிறேன்.எனக்கு புத்தகங்கள் வாசிப்பதும் எழுதுவதும் பிடிக்கும். படம் வரைவது, keyboard வாசிப்பது, Chess விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவது (lichens.com ஊடாக AnsshiAAR) யோகாப் பயிற்சிகளில் ஈடுபடுவது போன்றன எனது ஏனைய பொழுதுபோக்குகளாகும்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -