பூமி
அழகு மிக்க பூமியே
இயற்கை சூழ்ந்த கோளமே
உயிர்கள் வாழும் உலகிது
பூக்கள் மலரும் இடமிது
மரங்கள், ஆறுகள் கொண்டதால்,
பச்சை,நீலம் ஆனதே
சந்திரன் உற்ற தோழனாம்
மூன்றாம் கோள் ஆனதாம்.

பழம்
இனிப்பு மிக்க பழமிது
இயற்கை தந்த பரிசிது
நாக்கில் பட்டால் கரையுமாம்
வண்ண நிறம் ஆகுமாம்
பட்சி உண்ணும் பழமிது
உண்ண உண்ண இனிக்குமாம்
சக்தி தரும் கனியிது
காற்றில் ஆடி அசையுமாம்.
