கண்ணாடி எறும்பு

கவிதைகள்

- Advertisement -

கண்ணாடி எறும்பு

உள்ளிருக்கும்
ஒரு துளி
தித்திப்புக்காய்
அயராது ஊர்ந்தபடியே
இருக்கின்றன
கண்ணாடிச்
சாளரத்து
வெளி எறும்புகள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

காதல்

கால வெளியின் சூட்சும
இடுக்கில் நுழைந்து
பின்னோக்கிப் பயணித்தடைந்த,
செம்பருத்திப் பூக்களும்
புங்கை மர இலைகளும்

நிரம்பியிருந்த
ஒரு பெருவெளியில்,
பின் எப்பொழுதுமே
பற்றப் போகாத
என் கரம் பற்றி
ஒரு பேரன்பின் முடிவிலியில்
நீ நடந்து கொண்டிருந்தாய்…

காமராஜ்
காமராஜ்https://minkirukkal.com/author/kamaraj/
என்னை பாதித்த, பாதிக்கும் விடயங்களை எழுத்தாக்க முயலும் ஒரு சாதாரணன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -