மின்கிறுக்கல்

Myindia.sg கவிதைப்போட்டி 2021

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

வாழ்க்கை எனும் அழகியப் பக்கத்தில்
வறுமை எனும் கூர்முனை எழுதிய
அழுக்குக் கவிதை தான் பசி!

இன்னொருவர் பசிக்கக் கேட்பின்
இறந்தேனும் தருதல் தகைமை.

பசித்தவனுக்கு இடனறிந்து
பகிர்ந்து தருகையில் – அவன்
பட்டினி பறந்திடும்!
இங்கே இறைமாட்சி ஓங்கிடும்!

வாழ்வதற்காகப் பிறந்து வயிற்றுக்காகப் போராடுவதே வாழ்க்கையாகிவிட்டது இந்த பஞ்சம் சூழ் பூமியில்!

ஏழைப் பிள்ளைகளின் விலா எலும்புகளில்
ஏறி இறங்கி விளையாடுகிறது பசி!
சேறு மிதிக்கும் விவசாயி குடும்பத்தின்
சோகம் தெரிக்குது சோற்றில் குழம்பாய்!

விளைந்ததை மதித்து
விதைத்தவன் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்!

பஞ்சம் இல்லா ஜெகத்தினைப் படைக்க
பாமரன் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்!

Exit mobile version