மின்கிறுக்கல்

யமுனா வீடு – 51

தன்னை அர்பணித்தவளுக்கு
பறந்து நடனமாடும்
ஒரு கனவு வருகிறது
அலங்கரிக்கப்பட்ட
நகரம் ஒளிர்வதைக் காண்கிறாள்

இந்த நகரத்தின் உறக்கத்தை கலைத்தவளைப்போல
காற்று தொட்டதும் விழித்துக்கொள்கிறாள்

மிச்ச வாழ்வில்
நிச்சயமாக உறக்கம் வந்துவிட
நீண்ட நேரம்
நடந்து பார்க்கிறாள்

பொன் வசந்தமானவள்
வரும் பகல் பொழுதில்
யாரோ உரையாடிக்கொண்டிருக்க
ஒன்றை நிராகரிக்கிறாள்
ஒவ்வொன்றையும் நிராகரிக்கிறாள்

ஏதோ ஒன்று நினைத்துக்கொள்ள
ஏதோ ஒன்று மறந்துவிட
ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ளும்
யமுனா

ஒவ்வொரு வண்ணத்தை
எடுத்துப் பூசிக்கொண்டு
ஒரு குழந்தையைப்போல
அவள் சேருமிடறிய
இந்தப் பகல் தீராது
மனதின் சிறகை விரித்து
பறந்துகொண்டிருக்கிறாள்.

Exit mobile version