மின்கிறுக்கல்

யமுனாவீடு – 42

ஆழ்ந்த மௌனத்தோடு
நின்றுகொண்டிருந்தவனிடம்
வறண்ட வானிலிருந்து
விழுந்தன மழைத்துளிகள்
நதியான மழைத்துளிகளைப் பார்த்து
மௌனம் கலைத்தவன்
பேச ஆரம்ப்பித்தான்
ஓரிருள் கிழித்து
வந்த கனவொன்றைப்பற்றி
ஆழ்மனதில் எழுந்த குரலைப்பற்றி
அவளிடத்தில் கொண்ட கோவம்பற்றி
சிறுநோவைப்பற்றி
நீலவானம் பார்த்து அரற்றிக்கொண்டதென
உக்கிரக்காளியின் சிலை பார்த்ததை
நினைவிலிருந்ததை பேசிக்கொண்டிருந்தவன்
தூய அன்பினில்
கண்கள் மூடி
கணப்பொழுதில் மண்டியிடுகிறான்
யமுனா
இறையானவள் நீ
வலிகளை மறைத்த யமுனா
மண்டியிட்டு கதறி அழுதவனை
வாஞ்சையோடு தடவிக்கொண்டிருந்தாள்
ஆழ்ந்த உறக்கத்திருந்தவன்
ஒருமுறை கண்களைத்திறந்து பார்த்தான்
கனவாய் கடந்துபோகுமவள்
அன்பின் தீபஒளி

Exit mobile version