மின்கிறுக்கல்

யமுனா வீடு – 16

PC: ஓவியர் துரையெழிலன்

யமுனாவின் வீடு
அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு
ஒரு அடையாளமாகிவிட்டது
அந்த தெருவை கடக்க நினைக்கும் புதியவர்
முகவரியை விசாரித்தால்
யமுனா வீட்டின் இடது புறமோ
வலது புறமோ என்றுதான் ஆரம்பிப்பார்கள்
பச்சை நிற கிரீல் கேட்டுடன்
அடையாளமாகிவிட்ட யமுனாவின் வீட்டை
கடந்து செல்லும் புதியவருக்கு
கற்பனையாக வந்து செல்லும் யமுனா
ஒருபுறம் தலைசாய்த்து
பின்
இருபுறமும் தலை ஆட்டி
பல் வெளித்தெரிய ஒருபோதும் புன்னகைத்ததில்லை

Exit mobile version