மின்கிறுக்கல்

யமுனா வீடு – 15

PC: ஓவியர் துரையெழிலன்

நூலகத்திலிருந்து தருவிக்கப்பட்ட புத்தகங்களில்
மடித்து வைக்கப்பட்ட பக்கங்கள்
அடிக்கோடிட்ட வரிகளுமாக இருந்தது
யாருக்கான சொற்களாக இருக்கக் கூடும்
எதை சொல்ல அடையாளப்படுத்தப்பட்டன
கதையாடலின் குறிப்பும்
கவிதைக்கான குறிப்பும்
ஒன்றைப் போலவே இருக்கும் – இந்த குறிப்பு
எனக்கு உணர்த்த வருவது என்ன
இங்கு அடிக் குறிப்பிடப்பட்டுள்ள வாசிப்பிற்கான காத்திருப்பு
ஒரு பூனைக் குட்டியின் சினேகத்தை பெறுவதாகும்
பூனைக் குட்டியின் சினேகத்தை பெறுவதும்
இந்த வாசிப்பிற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை
தீராத பக்கங்களை கடந்து செல்வதும்
பூனைக் குட்டியின் சினேகத்தை பெறுவதும்
ஏனோ ஞாபகப்படுத்துகிறது
யமுனாவின் வீட்டை கண்டடைய
ஒரு பறவையின் பறத்தலின் தூரம்தான்
யமுனாவின் வீட்டை கண்டடைதல்.

Exit mobile version