மின்கிறுக்கல்

யமுனா வீடு -79

கடந்துபோவதில்
ஒவ்வொருவருக்கும்
ஒரு நிலை

கதைகளைச் சொல்பவர்களிடத்தில்
கடந்துபோகிறேன்

இல்லை
யமுனா
நீ
கடத்திப்போகிறாய்

ஒவ்வொருவரும்
கதை சொல்வார்கள்
கேட்பவர்களுக்குச் சுவாரஸ்யமாகயிருக்கும்

அந்தக் கதையை
நான்
சொல்லப்போவதில்லை

நான்
யார்?

உங்களுக்கு
நான் யார்?

யமுனாவுக்கு
நான் யார்?

தெய்வத்திற்கு
நான் யார்?

சென்றடைந்த கடலிடத்தில்
கேட்டுப்பார்த்தேன்

ஒன்றும் சொல்லவில்லையா

அலை சொல்லிற்று
ஒவ்வொரு அலையும் சொல்லிற்று
யமுனா, யமுனா, யமுனா

பரபரப்பான
மனித சமுத்திரத்தினுள்
மௌனமாகக் கடந்துசெல்கிறேன்
யமுனா, யமுனா, யமுனா

உள் உணர்ந்து
உச்சரிக்கும் ஒரு சொல்லை
யாருக்குத்தான் கேட்கநேரிடும்
யமுனா, யமுனா, யமுனா

பித்து

எழுதுதல் ஒரு பித்து
வாழ்தல் ஒரு பித்து
யமுனா ஒரு பித்து

யமுனா
யமுனா, யமுனா
யமுனா, யமுனா, யமுனா….

Exit mobile version