மின்கிறுக்கல்

யமுனா வீடு -68

திசைகள் தோறும்
மனிதர்கள் இருக்கிறார்கள்
எல்லோரையுமே
தூரத்தில் வைத்திருக்கிறேன்

நம்பிக்கையிலான
உரையாடல் தொடர்கிறது
நிச்சயமாக
அவர்கள் நல்லவர்கள் தான்

இங்கு எதுவுமே திட்டமிடப்படவில்லை
காற்றும் நீரும் நெருப்பும்
ரகசியங்களை கலைத்துபோடும் போது
ஒதுங்கிப்போகிறோம்

அலை பார்த்து பின்நழுவும்
மனிதர்களான நாம்
சிலிர்க்க வைக்கும்
அனுபவங்களுக்காக கடல் பார்க்கிறோம்

பணிக்கப்பட்ட ஒன்றைச்
செய்யும் மனிதர்களான நாம்
விதிக்கப்பட்டதற்காக அதனைத்
தொடர்கிறோம்

எனக்காகவும், உனக்காகவும்
பயணமைக்காத வாழ்க்கையில்
என்னதான் இருக்கிறது

ஒற்றைச் சிறுமியாய்
கடலோடி திரும்பி வரும்வரை
ஒருநாளேனும்
காத்திருந்துபாருங்கள்

இருள் பலருக்கும்
விலகுகிறது
ஒருவன் மட்டும்
இருளை வெளிச்சமாகப் பார்க்கிறான்
யமுனாவின் பிரார்த்தனைகளாலானது

Exit mobile version