மின்கிறுக்கல்

மெய்நிகர் உலகம் – 11

வணக்கம். எந்த ஒரு மனிதனுக்கும் வாழ்வின் அடிப்படைத் தேவை என்னவென்றால் உணவாக தான் இருக்கும். உணவின்றி நம்மால் அதிக காலம் தாக்குபிடிக்க முடியாது. உலகில் உள்ள அனைத்து உணவு சம்பந்தப்பட்ட தொழில்களின் மொத்த மதிப்பை சேர்த்தால் 730 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தோராயமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய துறை உலகில் வேறெங்கும் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் நாம் எதிர்பார்க்காத சில துறைகள் கூட மிக அதிகமான சந்தை மதிப்பை கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு துறையைத் தான் இன்று முதல் நாம் அலசி ஆராயப் போகிறோம். அது என்ன தெரியுமா? அதுதான் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு.

நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்த பின்புதான் நாம் எந்த ஒரு ஆடம்பரத்திற்கும் செல்கிறோம். பொழுதுபோக்கு என்பது உலகின் அதிகப்படியான பகுதிகளிலும் ஒரு ஆடம்பர நிகழ்வுதான். பசியில் அழுது கொண்டிருக்கும் எந்த ஒரு சிறு பிள்ளைக்கும் விளையாடாது. அதன் பசி அடங்கிய மறு நொடியே அதற்கு தேவைப்படுவது விளையாட்டுதான். குழந்தைகளின் விஷயத்தில் மிகவும் வெளிப்படையாக தெரியும் இந்த நிகழ்வு பெரியவர்களின் மனதில் கூட மிகவும் ரகசியமாக புதைந்துள்ளது. நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் நடத்துவதற்கு விளையாட்டு என்பது ஒரு அத்தியாவசியமான விஷயம் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் எந்த ஒரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே அதிகம் புகழுடன் சம்பாதிப்பது ஒரு விளையாட்டு வீரர் ஆகத்தான் இருக்க முடியும். கால்பந்தாட்டம், கைப்பந்து, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, குஸ்தி என்று ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான புகழ்பெற்ற விளையாட்டு வேறுபட்டு இருந்தால் கூட இந்த விளையாட்டு அனைத்தும் ஒரே நோக்கத்துடன் தான் தேவைப்படுகிறது. அது என்ன தெரியுமா? யுத்தம் என்பதன் மெய்நிகர் வடிவம்தான் விளையாட்டு!

இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் பிறந்த உடனே உணவுக்கு அடுத்தபடியாக முக்கியமான தேவை தன்னுடைய சுற்றுப்புறத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்வதுதான். அதற்காகப் பிறந்த உடனேயே மற்றொரு மனிதன் சண்டை போடுவது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நாம் மூச்சு விடும் ஒவ்வொரு சுவாச காற்றிலும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் கலந்துள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு வகையில் நம்மை கொல்லும் அளவிற்கு திறமை படைத்தது. இந்த நுண்ணுயிர் இடமிருந்து காத்துக்கொள்வது முதல் இறுதி மூச்சு வரை தொடர்ந்து முத்தமிட்டுக்கொண்டே தான் எந்த ஒரு உயிரினமும் இருக்க வேண்டும். இந்த யுத்தத்தில் தோற்கும் அந்த ஒரு கணம் தான் மரணம் எனப்படுகிறது. இவற்றில் சில யுத்தங்கள் தொடர்ந்து போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற சில யுத்தங்களை எப்போதாவது ஒரு முறை செய்தால் போதும். ஆனால் அந்த இடங்கள் திடீரென்று யாராலும் செய்ய முடியாது அதற்கு முன்பே சில பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். அந்தப் பயிற்சிக்கு நாம் வைத்த பெயர் தான் விளையாட்டு!

நான் மேலே கூறிய பல்வேறு விளையாட்டுகளில் ஓட்டம், சண்டைப்பயிற்சி முதலிய பல்வேறு திட்டங்கள் நேரடியாகவே இருப்பதை உங்களால் பார்க்க முடியும். ஆகவே விளையாட்டு என்பது யுத்தத்தின் மெய்நிகர் வடிவு தான் என்பதை முதலில் நன்கு புரிந்து கொண்டீர்களா? முதலில் நேரடியான தாங்களாகவே இருந்த விளையாட்டுகள் பலவும் காலப்போக்கில் தற்போது மிகவும் விசித்திரமான மெய்நிகர் வடிவங்களை அடைந்துள்ளது. அவை எவ்வாறு இந்த விதங்களை அடைந்தது என்பதை தான் நாம் இப்பொழுது தொடர்ச்சியாக பார்க்கப் போகிறோம். 

ஒரு குழந்தை பிறந்தவுடன் முதலில் செய்யும் செய்கை என்ன? அழுவது தானே. அழுகை என்பதே அதன் பின்னால் ஒளிந்துள்ள உடல் தேவைக்கான ஒரு மெய்நிகர் சமிக்ஞை தான். நாம் எப்பொழுது அறிகிறோம். ஒரு தேவை நமது வரம்புக்குள் எளிதாகக் கிடைக்கும் என்றான் அழுகை என்பது நமக்கு தேவைப்படாது. எப்பொழுது நம்முடைய முயற்சியால் அதனை செய்ய முடியவில்லை என்ற நிலை வந்தவுடன் உடனடியாக மற்றவர்களை உதவிக்கு அழைக்கும் பொருட்டு செய்யும் முதல் சைகை செய்தான் அழுகை. இதற்கும் யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? முழுமையான சம்பந்தம் உள்ளது. இதனை ஒரு விளையாட்டு உடன் பொருத்தி பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும். அதனை அடுத்த பகுதியில் விரிவாக கூறுகிறேன். அதுவரை நன்றி.

-மீண்டும் சந்திக்கலாம்

Exit mobile version