மின்கிறுக்கல்

மரணித்த மர(ன)ங்கள்…..

ஆறறிவாய் உதித்தும்
ஜடமாகிறான் மனிதன் /
உயிரற்றும் உயர்திணையாகி
உரமாகின்றன மரங்கள்/

காற்றை உரித்து உயிரைக்
கொடுத்தும் /
ஆசுவாசப்படுத்தி இளைப்பாற
உடலை கொடுத்தும் /
நெஞ்சில் ஈரமற்றவனாய்
நன்றி கெட்டு/
உடலை சரிக்கும் நவீன
மனிதன் /

விருட்சமாய் உருப்பெற்று
மழையை வசமாக்கி /
சமநிலையில் உலகை வழிநடத்தி
வாழ்வளிக்கும் /
உயிரையே அழித்ததால் பார்
பாலைவனமாகி /
வறுமை வாழ்வாகி நகரமாக
நகர்கிறது/

நவீனெனும் மடமையில்
மனிதம் மரணித்தலையும்/
மனிதனிடம் பலியாகி
சிதையும் மரங்கள்/
கரு அழித்து பேரழிவிற்கு
வழிசமைத்து/
துட்சமாய் நினைத்து வேர்
களைந்து /

மரணித்த மர(ன)ங்களை
விதைதூவி விருட்சமாக்கி /
உரமிட்டு உயிர்ப்பித்திட
கை கோர்த்திடுவீர்/

Exit mobile version