அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.
நமது தேசத் தந்தை, காந்திஜி அவர்களை பள்ளி செல்லும் முதல் நாளிலேயே! நமக்கு அறிமுகப்படுத்தி விடுகிறார்கள்.நம் ஆசிரியர்கள். குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில், புத்திலி பாய்,கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி என்பவருக்கு மகனாக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார்.நாமறிந்த காந்தியை, என் பார்வையில், நாடறிந்து வியந்த! அண்ணல் மகாத்மாவை பற்றிய கருத்துக்கள் சிலவற்றை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆங்கில வழி கல்வி பயிலும், எங்களுக்கு ஆரம்பத்தில் காந்திஜியின் ” பொன்மொழிகள் ” என்று மூன்று முத்தான வழிகள் சொல்லி தந்தார்.
1 _ தீய சொற்களை பேசாதே!
2 _ தீய செயல்களை பார்க்காதே!
3 _ தீய சொற்களை கேட்காதே!
ஆரம்ப கல்வி முதல் எங்களுக்கு , இந்தபொன்மொழிகள் நகைச்சுவையாக்காகவே பயன்படுத்தி வந்தோம். தற்போது எங்களுக்கு கைபேசி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எங்களுக்கு முதல் நாளில் ஆசிரியர் சொல்லிய, ஓர் அறிவுரை! கைபேசிகள் வழியாக, பாடங்கள் மட்டுமே! கற்றுக் கொள்ளுங்கள். அதில் வேறு, எதுவும் பார்க்க, பேச, கேட்க வேண்டாம்!. சுருக்கமாக காந்தியின் மூன்று பொம்மைகள் போல! என்றார். எங்களுக்கு இப்போது மூன்று பொன்மொழிகள் பற்றிய, கருத்து தெளிவாக புரிந்தது., “அண்ணலின் தீர்க்க தரிசனம் ” கண்டு வியந்து! எக்காலத்திலும் பொருந்தும் பொன்மொழிகளை போற்றிடுவோம்!.
எளிய, மற்றும் நடுத்தர மக்கள் உணவில், சத்துக்கள் பெற, விலை மிகுந்த, பருப்பு வகைகளை பயன்படுத்த முடியாது. ஆனால், அதே சத்துக்கள் நிறைந்த,அவித்த நிலக்கடலையை, எல்லோரும் பயன்படுத்த முடியும்! என்று தான் பயன்படுத்தி, எளிதாக உணர்த்தினார். இப்போது விஞ்ஞான பூர்வமாகவும், உறுதி செய்து உள்ளனர்.
நாட்டின் முதுகெலும்பு, கிராமங்கள் என்று வலியுறுத்தினார்.கிராமங்கள், மற்றும் விவசாயம் செழிக்கும் போது, நாடு தன்னிறைவு பெற்று, வளர்ச்சி அடையும், என்பது மகானின் கணிப்பு. தென்னாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது, ஒட்டிய வயிற்றோடு, இடுப்பில் நான்கு முழ வேஷ்டியுடன், மேல் சட்டை இல்லாமல், வயலில் உழுது கொண்டு இருக்கும், விவசாயிகளைக் கண்டபோது, அவரது மனம் நொந்து, தனது ஆடம்பர உடைகளை துறந்து, ஏழை விவசாயிகள் போல, மேலே ஒரு துண்டு போர்த்தி கொண்டு, இடுப்பில் விவசாயிகள் போல நான்கு முழ வேஷ்டி மட்டுமே! அணிந்து கொண்டார்.வாழ்நாள் முழுவதும் இதே உடையுடன் வலம் வந்தார். தானே! ஒரு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டினார். ஒரு செயலை செய்ய, முதலில் தான் செய்து ,பிறருக்கு உணர்த்தினார்.
தான் சிறுவயதில் கண்டு கழித்த, அரிசந்தர நாடகம் உண்மையின் மீது நம்பிக்கை, பற்று ஏற்பட காரணமாக இருந்ததுள்ளது. அதேபோல் சிரவணன் பிதுர் பக்தி என்ற இன்னொரு நாடகமும் அன்னை, தந்தை மேல் மதிப்பு, மரியாதை கொள்ள வைத்தது. அதன் பின்னர், மேற்படிப்பிற்காக லண்டன் செல்லும் போது, தாயாரிடம் அவர் மீது கொண்ட பற்றுதலால் மது, மாது, புலால் தொட மாட்டேன் என்று மூன்று சத்தியங்களை செய்து கொடுத்தார். இது உண்மை, சத்தியத்தை அவர் எந்த அளவுக்கு நேசித்து வந்தார் என்று வியப்பைத் தந்தது.
அஹிம்சை, சுதேசி என்ற கொள்கையை இந்திய தேசிய காங்கிரஸ் மிகப் பெரும் வெற்றி காண காந்தி உறுதுணையாக இருந்தார். முதல் போராட்டம் சாம்ராண் மாவட்டத்தில் விவசாயிகளுக்காக நடத்தினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி உடைகளை எல்லோரும் அணிய வேண்டும் என்று விரும்பினார். இதனால் தன்னிறைவு மற்றும் உள்நாட்டு தயாரிப்பு மேம்படும் என்பது அவரது கொள்கை இன்று மிகவும் அவசியமாகும்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உப்பிற்கு ஆங்கிலேய அரசு வரிவிதிப்பு செய்த போது, அதை எதிர்த்து உப்பு சத்யாகிரகப் போராட்டம் தண்டி யாத்திரை செய்தார். நாட்டிற்கு உணவு உற்பத்தி செய்யும், விவசாயமும், விவசாயிகள் மிகவும் முக்கியம் என்று உணர்த்திய மகான்.
காய்கறிகள், பழங்கள், ஆட்டுப் பால் என்று எளிமையான உணவையே! விரும்பி உண்டார். அது சத்து நிறைந்த உணவும் கூட என்பது உண்மையே!.
காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள், முக்கடலும் சங்கமிக்கும், கன்னியாகுமரியில், அவரது நினைவு மண்டபத்தில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட கலசத்தில் சூரிய வெளிச்சம் படுவது மிகவும் அதிசயம். அற்புதம்.
ஒரு அதிகாரி, நேர்மையாக, உண்மையாக நடந்து கொண்டால் அவரை காந்தியவாதி என்று அழைக்கப்படுகிறார். அந்த அளவுக்கு உண்மையாக வாழ்ந்து காட்டியவர் நம் அண்ணல் காந்தியடிகள். மகாத்மா என்ற பட்டத்தை இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் சூட்டப்பட்டது.
உப்பு சத்யாகிரகப் போராட்டம், ஒத்துழையாமை, அஹிம்சை, வெள்ளையனே! வெளியேறு! ரௌலத் சட்டம், என்று எல்லா போராட்டமும் அஹிம்சை வழியாக, அறவழிப் பாதையில் நடத்தினார். சுயசரிதை புத்தகம், சத்திய சோதனை என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது படிக்கும், ஒவ்வொருவரும் வியந்து! போற்றி! நம் தேசப் பிதாவை விரும்புவார்கள்.
கத்தி யின்றி, ரத்த மின்றி, வன்முறை இல்லாமல் ஒரு போராட்டம் மூலம், நமது கருத்துக்கள் சொல்லி, மாற்று எண்ணம், செயலை எதிர்ப்பது என்ற அறவழிப் போராட்டம் மகாத்மாவின் கொள்கை வழியாகும்.இன்று எத்தனையோ போராட்டங்கள் அறவழிப் பாதையில் வெற்றி கண்டுள்ளது. இதுவே! உலகம் இதுவரை! கண்டுள்ள போராட்டங்களில் மிகப் பெரிய ஆயுதமாக கருதப்படுகிறது. அஹிம்சை வழியில் அண்ணல் காந்தி என்றும், எல்லா இடங்களிலும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மகாத்மா மக்களுக்காக வாழ்ந்த, மனித நேயமிக்க மாமனிதர்.!.
என் பெயர் _ மா. கிருத்திக்
தந்தை பெயர்_ ச. மாணிக்கம்.
தாயார் பெயர்_ ரா. பத்மாவதி.
நான் என். எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பதினோராம் வகுப்பு (+1 )
படிக்கிறேன்.