மின்கிறுக்கல்

சுடர்முகம்

கண்ணுக்கு அழகிய கைக்குழந்தையை
கையில் அள்ளிஅணைத்து
கண்மணியே! தேவதையே! எனக் கொஞ்சி
செல்லம்மாள் என்ற நாமத்தோடு
அன்பாலே நெய்த சுடர்முகத்தாளே!
மகாலட்சுமியின் வடிவமாய்
வளம் வந்த திருமுகத்தாளே!
பள்ளிப்பருவத்தைக் கடந்து
கல்லூரியில் பூத்தவளே!
எவர் தான் அறிந்தாரோ?
செம்மேனி அது கருகுவதை
எவன்தான் சிதைத்தானோ?
சுடர்முகத்தாளை…..
தீயினும் கொடிய அமில வீச்சாலே!!

Exit mobile version