அடைகாத்த கோழி கொத்தி விரட்டும்
குஞ்சுகளைத் தானாக இரை தேட!
நாவால் நக்கிய வெள்ளைப் பசுவும்
கன்றை முட்டித் தள்ளும் முன்னேற!
பொறுமையை மறந்து தத்தளிக்கும் மகன்
வாலிபக் கப்பலில் ஏறித் திண்டாடுகிறான்
அவன் மகனால் நங்கூரமிடும் வரை!
மனித இனம் மட்டும் தானிங்கு
மல்லுக்கட்டுகிறது பிள்ளைகள் வளர்ச்சியில்
மரண அழைப்பு வரும் வரை! என்றபோதும்
அன்றைய ஆனந்த மழைத்துளிகளால்
மனக் காகிதக் கிறுக்கல்கள் மக்கிவிடுமோவென
வெள்ளைக் காகிதத்தில் கிறுக்கியதால்-இன்று
கண்ணீர் மழையில் நனைய விடாமல்
அந்த வாலிபம் தொலைத்த தந்தைக்கு
குடையாகிறது மகனின் அன்பு முத்தங்கள்!