புத்தனைப் பார்க்கலாம்
சிந்தனை வளர்க்கலாம்
சித்தனைப் பார்க்கலாம்
ஆன்மிகம் அறியலாம்
நீலப்பெருங்கடலில் நனையாமல் நீந்தலாம்
காட்டுக்குள் தொலையாமல் தேடலாம்
எந்த நாட்டுக்குள்ளும் கடவுசீட்டு இல்லாமல் நுழையலாம்
எந்த தேசம் போகவேண்டும்
என்ன மொழி கற்க வேண்டும்
உங்கள் வினா எதுவோ
விடையுண்டு என்னிடம்
இலையும் பூவும்
நாரும் வேரும் ஒருசேரக்
கொண்ட அறிவு மரத்தை
அடைக்கி வைத்துள்ள
அதிசய விதை நான்
மண் வேண்டாம் வளர்க்க
பொன் வேண்டாம்
நீர் வேண்டாம்,
விதைக்க ஏர் வேண்டாம்
பனுவல் என்னைப் பற்றிடும்
கரம் பற்றி வளர்வேன்
அவருள் அறிவு விருட்சமாய்
விதைத்தால் மனிதற்கு மாசற்ற
காற்று தருவேன் மரத்தால் ;
மடிந்தால் அறிவு புகட்ட அவர்தம்
கரங்களைப் பற்றிடும் என் மரத்தாள்.
(பனுவல்:புத்தகம்,ஏடு)