மின்கிறுக்கல்

விருட்சம்

என் வனப்பினை நான்
ரசிக்கத் துவங்கிய நாளில்
பயமும் கூடவே
தொற்றிக்கொண்டது
பார்ப்பவர்கள் எல்லாம்
என்னை அபகரிக்கத் துவங்கினார்கள்
அஸ்திரங்களாக
கற்களை வீசி எறிந்தார்கள்
அபகரித்த என்னை
ரசித்து புசித்து
வீசி எறிந்தார்கள்
வீதியிலே
விழுந்தேன்
மண்ணில் புரண்டேன்
தட்டுத் தடுமாறி தானே
எழுந்து நிற்கிறேன்
மீண்டும் இதோ
என்முன்னே நிற்கிறான்
என்மீது கல் எரிந்தவனின்
மகன்
அவனையும் மன்னித்து
அவனுக்கு என்னால்
ஆனவற்றை வழங்குவேன்.

~மாமரம்.

Exit mobile version